• May
    23
    Thursday

Main Area

Main



நொந்த தேமுதிகவை புண்படுத்த விரும்பவில்லை: சுதீஷ்க்கு துரைமுருகன் பதிலடி

துரைமுருகன் - சுதீஷ்
துரைமுருகன் - சுதீஷ்
Loading...

சென்னை: தேமுதிகவினர் கூட்டணி பற்றி பேச துரைமுருகனை சந்திக்கவில்லை என தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்ததற்கு, துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.

யாருடன் கூட்டணி அமைப்பது என்ற குழப்பத்தில் இருக்கிற தேமுதிக தரப்பு, திமுக உடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்ததாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார். மேலும் அவர், சுதீஷ் மொபைலில் என்னிடம் முக்கால்மணி நேரம் பேசினார். உங்கள் கவுரத்தை காப்பாற்றும் அளவு எங்களிடம் சீட் இல்லை, அதை தலைமைதான் முடிவு செய்யும் என்று சுதீஷிடம் கூறிவிட்டேன் என தெரிவித்தார். இந்நிலையில், தேமுதிகவினர் கூட்டணி குறித்து துரைமுருகனிடம் பேசவில்லை, தனிப்பட்ட முறையில் பேசதான் சென்றார்கள் என சுதீஷ் பேட்டியளித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், தேமுதிகவினர் தனிப்பட்ட முறையில் பேச என்னிடம் எதுவும் இல்லை. சுதீஷ் மீது நான் வைத்திருந்த மரியாதையை அவரே குறைத்துக் கொண்டார். தனிப்பட்ட முறையிலான சந்திப்பு என்றால் நேற்றே மறுத்திருக்க வேண்டியதுதானே, மறுபடியும் அதிமுகவிடம் பேசுவதற்காக எங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். தேமுதிக ரொம்ப நொந்து போயிருக்காங்க, அவர்களை நான் புண்படுத்த விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

2018 TopTamilNews. All rights reserved.