• July
    18
    Thursday

Main Area

Main



திமுக எம்.எல்.ஏக்கள் 21 பேரை தூக்கும் எடப்பாடி... மு.க.ஸ்டாலினை கதிகலங்க வைக்கும் அதிரடி வியூகம்..!

​​ஸ்டாலின் எடப்பாடி
​​ஸ்டாலின் எடப்பாடி
Loading...

ஆட்சியை தக்க வைக்க டி.டி.வி.தினகரனை மட்டுமல்ல...  திமுகவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ’பி ப்ளானை’ தொடங்க இருப்பதால் கதி கலங்கிக் கிடக்கிறது மு.க.ஸ்டாலின் தரப்பு.

பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை காப்பாற்ற பல்வேறு அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான அதிமுக  3 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப உள்ள நிலையில்  அடுத்து திமுக எம்.எல்.ஏ.,க்கள் 21 பேரை தகுதி நீக்கம் செய்ய அதிரடி திட்டம் வகுத்துள்ளார் எடப்பாடி.ஸ்டாலின்

2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வந்த குட்கா புகாரை சட்டசபையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கையிலெடுத்தார்.  ’’குட்கா புகாரில் சிக்கியுள்ள சுகாதாரத்துரை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை தலைவர், சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றும் கோரிக்கை விடுத்தார். 

திமுகவினர் ஆதாரத்தோடு பேசவேண்டும் என்று ஆளும்கட்சியினர் கேட்க, திமுக எம்.எல்.ஏ-க்கள் 21 பேர் திடீரென குட்கா பொட்டலங்களைச் சட்டசபையில் எடுத்துக்காட்டினர். திமுக உறுப்பினர்களின் இந்தச் செயலைக் கண்டித்த சபாநாயகர் தனபால், எம்.எல்.ஏ-க்கள் 21 பேருக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்குமாறு உரிமைக் குழுவுக்குப் பரிந்துரை செய்தார். இந்தப் பிரச்சனை உரிமைக் குழு தலைவரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனிடம் சென்றது.

 ​​ஸ்டாலின்

இந்த நிலையில் உரிமைக்குழுவின் விசாரணையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று திமுக நீதிமன்றத்தை நாடியதால்இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை நீக்க வேண்டும் என அதிமுக கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பொள்ளாச்சியில் இருந்த ஜெயராமன் சென்னைக்கு விரைந்துள்ளார். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் நீதிமன்ற இடைக்கால தடையை நீக்க கடும் முயற்சி எடுத்து வருகிறார்.Edappadi K. Palaniswami

அப்படி தடை நீங்கும் பட்சத்தில் உரிமைக் குழு திமுக எம்.எல்.ஏக்கள் 21 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்போவது உறுதி. அதனடிப்படையில் திமுக எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தால் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்லக் கூடும். நீதிமன்றம் அதை விசாரித்து இறுதி தீர்ப்பு வரும்வரை ஆளும்தரப்புக்கு பிரச்சனை வருவதற்கு வாய்ப்பில்லை. ஆகவே ஆட்சியை காப்பாற்ற எடப்பாடி தனது வியூகத்தை அமைத்துள்ளார். ஆட்சி கவிழும். அடுத்து தமது ஆட்சிதான் என்கிற கனவில் இருந்த திமுகவுக்கு இது பேரிடியாகயாக அமையும். எடப்பாடி வகுத்து வரும் அதிரடி அரசியல் வியூகங்கள் அதிமுகவினருக்கு உற்சாகத்தையும், திமுகவினருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.  

2018 TopTamilNews. All rights reserved.