• 12
    புதன்
  • 12
    டிசம்பர்

Main Area

Main

உருளைக்கிழங்கு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

edappadi palanisamy, modi

சென்னை: உதகையில் இருக்கும் மத்திய உருளைக்கிழங்கு மையத்தை மூடக்கூடாது என பிரதமருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், உதகையில் உள்ள மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு மையத்தை மத்திய அரசு மூடக்கூடாது. மையத்தை மூடாமல் உருளைக்கிழங்கு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். 957-ல் தொடங்கப்பட்ட இந்த மையம் கடந்த 70 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தை மூடினால் உதகை,கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.

தென்மாநில விவசாயிகள் பஞ்சாப்பில் உள்ள ஆய்வு மையத்தை நாடும் சூழ்நிலை உருவாகும். வட மாநில ஆய்வு மையம் உருவாக்கும் ரகங்கள் இங்கு பயன்தராது. எனவே, ஆய்வு மையத்தை மூடாமல் உருளைக்கிழங்கு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என கூறியுள்ளார்.

             
2018 TopTamilNews. All rights reserved.