• June
    19
    Wednesday

Main Area

Main



கைகொடுத்த யூட்யூப் : 8 வயதில் 106 மொழிகளை கற்று தேர்ந்த சென்னை சிறுவன்!

நியால்  தொகுலுவா 
நியால்  தொகுலுவா 
Loading...

சென்னை: சிறுவன் ஒருவன் யூடியூப் மூலம் 106 மொழிகளை எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டு  பன்மொழியாளராக  மாறியுள்ளார். 

சென்னையைச் சேர்ந்த எட்டு வயதான நியால்  தொகுலுவா என்ற சிறுவன் 106 மொழிகளை எழுதவும் படிக்கவும் கற்றுத் தேர்ந்துள்ளார். இந்த மொழிகளை அவர் கற்றுக் கொண்டுள்ளது ஆசிரியரை வைத்தோ அல்லது பயிற்சி வகுப்புக்குச் சென்றும் அல்ல. யூடியூப் மற்றும் இணையதளம் உதவியுடன்  இந்த சிறுவன் இதை கற்றுள்ளது வியப்பில்  ஆழ்த்தியுள்ளது.

niyal

இது குறித்துக் கூறும் சிறுவன் நியால், மொழிகளின் மீது  எனக்கு  விருப்பம் எப்படித் தொடங்கியது என்று எனக்கே தெரியவில்லை, என்னால்  106 மொழிகளில் எழுதவும் எழுதவும் முடியும், 10 மொழிகளில் பேசுவேன், தற்போது நான் ஐந்து புதிய மொழிகளைப் படித்து வருகிறேன்' என்று சர்வசாதாரணமாகக் கூறுகிறார்.

youtube

நியால் தான்  மட்டுமல்லாது தனது பெற்றோருக்கும் மொழி உச்சரிப்பைப் பயன்படுத்துவது எப்படி என்று கற்றுக் கொடுத்து வருகிறார். இது குறித்து அவரது தந்தை  ஷங்கர் நாராயணன் பேசும் போது, சிறுவயதில் நூற்றுக்கணக்கான மொழிகளை என் மகன் கற்றுக் கொண்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் மொழிகளை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டினான். அதனால் இணையம் மூலமாகவே அதை அவன் செய்து காட்டி விட்டான்' என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார். 

பொதுவாக சிறுவர்கள் இணையதளங்களை அதிகம் பயன்படுத்தினால் தவறான பாதைக்கு செல்வார்கள் என்ற பொதுவான கருத்து உள்ளது. ஆனால்  அதை பயன்படுத்துவதற்கான நோக்கம் சரியாக இருக்கும்பட்சத்தில் அதனால் ஆபத்து ஏற்படாது, நன்மைகளே வந்து சேரும் என்பதை இந்த எட்டு வயது சிறுவன் நிரூபித்துள்ளான். 

 

2018 TopTamilNews. All rights reserved.