#Thoothukudi ‘ஆத்திரத்தில் மக்கள்’ தூத்துக்குடியில் வெற்றி பெறுவது இந்த கட்சியா?
சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக இயங்கி வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ளன. அதிமுகவில் பாமக, பாஜக ,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளது. கூட்டணி கட்சிகளுடன் தொஅரசியல் கட்சிகள் வாக்கு வேட்டையில் இறங்கியுள்ளனர்.
கடந்த தேர்தல்களில் தூத்துக்குடி தொகுதி…
தூத்துக்குடி மாவட்டத்தில் 1991ஆம் ஆண்டு அதிமுகவை சேர்ந்த ரமேஷ் விபிஆர் 79 ஆயிரத்து 552 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.1996 ஆம் ஆண்டு திமுகவை சேர்ந்த என பெரியசாமி தூத்துக்குடி மாவட்டத்தில் வெற்றி வாகை சூடினார். அப்போது அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 511. 2006ஆம் ஆண்டு அதிமுகவை சேர்ந்த ராஜம்மாள் என்பவர் 73 ஆயிரத்து 286 வாக்குகள் பெற்று பெரியசாமியை தோற்கடித்தார். 2006 ஆம் ஆண்டு திமுகவை சேர்ந்த கீதா ஜீவன் 79 ஆயிரத்து 821 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
2011ஆம் ஆண்டு அதிமுகவை சேர்ந்த செல்ல பாண்டியன் என்பவர் 89 ஆயிரத்து 10 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். இதைத் தொடர்ந்து மீண்டும் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் 2016 ஆம் ஆண்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட செல்லபாண்டியன் மண்ணைக் கவ்வ வைத்தார் .அப்போது அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 45. கடந்த 30 ஆண்டுகளில் அதிமுக மூன்று முறையும், திமுக மூன்று முறையும் தூத்துக்குடி மாவட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது.
திமுக vs தமாகா
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி , விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி என் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ளன. இதில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பாக சிட்டிங் எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு மீண்டும் போட்டியிட தலைமை அனுமதி அளித்துள்ளது. கீதா ஜீவன் மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் பெரியசாமியின் மகள். தந்தையை போல தூத்துக்குடியில் எதிர்க்கட்சிகளுக்கு சவாலான வேட்பாளராக உள்ளார் கீதா ஜீவன். தூத்துக்குடி தொகுதியை கூட்டணி கட்சியான தமாகா-வுக்கு ஒதுக்கியுள்ளது அதிமுக. இங்கு தமாகா சார்பில் எஸ்டிஆர் விஜயசீலன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மக்களின் வாக்கு யாருக்கு?– டாப் தமிழ் நியூஸ் கள நிலவரம் !
தூத்துக்குடி என்றாலே முன்பெல்லாம் நினைவுக்கு வருவது உப்பளம், பனிமய மாதா கோவில் உள்ளிட்டவை தான். ஆனால் சமீபகாலமாக தூத்துக்குடி என்றதும் நமது நினைவுக்கு வருவது ஸ்டெர்லைட் போராட்டம் துப்பாக்கி சூடு, சாத்தான்குளம் ஜெயராஜ் -பெனிக்ஸ் படுகொலை தான்.இதனால் மிகப்பெரிய அதிருப்தியில் தூத்துக்குடி மக்கள் உள்ளார்கள்.இவர்களை வேட்பாளர்கள் சந்தித்து வாக்கு கேட்பது என்பது பெரும் சவால் நிறைந்த ஒன்றாக மாறியுள்ளது. இத்தகைய இறுக்கமான சூழலில் தூத்துக்குடி மக்களின் வாக்கு யாருக்கு? தேர்தல் பற்றிய அவர்களின் மனநிலை என்ன ?என்பதை நமது டாப் தமில் நியூஸ் சேனலின் நேரடி கள நிலவரத்தின்படி தெரிந்து கொள்ளலாம் வாங்க…!
தூத்துக்குடி தொகுதி மக்கள் மத்தியில் உங்கள் ஓட்டு யாருக்கு? என்ற கேள்வி கேட்ட போது, திமுக என்ற பதிலே அதிகளவு கிடைத்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் அதிமுக, நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம் என்று மக்கள் கூறியுள்ளனர். தூத்துக்குடி மக்களில் பெரும்பாலானோர் முக்கிய பிரச்னையாக குறிப்பிட்டு சொல்லாமல் ஒட்டுமொத்தமாக அதிமுக அரசின் மீதும் அதிருப்தியில் உள்ளனர் என்பது தெரியவருகிறது. அதேபோல் ஆளும் அதிமுக அரசுக்கு அதிகபட்சமாக 10க்கு 8 மதிப்பெண்களும், குறைந்த பட்சமாக பூஜ்யமும் கிடைத்துள்ளது.
ஒட்டுமொத்தமாக தூத்துக்குடியில் சட்டமன்ற தொகுதியை பார்த்தோமேயானால் இங்கு அதிமுக அரசு மீது மக்கள் கடுமையான கோபத்திலும் ,ஆத்திரத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது. காரணம் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு மற்றும் விலைவாசி உயர்வு.பெரும்பாலும் நாடார் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தூத்துக்குடியில் அதிகம் வசிக்கும் நிலையில் அவர்கள் சிறு வணிகம் முதல் பெரிய தொழில் நிறுவனங்கள் வரை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த சூழலில் விலைவாசி உயர்வினால் பொதுமக்களும், சிறு வணிகம் செய்வோர் ஒட்டுமொத்தமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் தூத்துக்குடி மக்களின் ஒட்டுமொத்த வாக்கில் பெரும் பகுதி திமுகவிற்கும், குறைந்தபட்சம் நாம் தமிழர் கட்சிக்கும் பிரியும் என்பது தெளிவாகிறது. மக்களின் தீர்ப்பு என்னவாக இருக்கும்? அவர்களின் கோபமும் அதிருப்தியும் தேர்தல் முடிவில் வெளிப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்…