• April
    25
    Thursday

Main Area

Main



திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு!

திருமாவளவன் (கோப்புப்படம்)
திருமாவளவன் (கோப்புப்படம்)
Loading...

சென்னை: சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.  சிதம்பரம் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனிச்சின்னத்திலும், விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

ravikumar

இது அக் கட்சிக்குள்ளாகவே சர்ச்சையை எழுப்பிய நிலையில், தனிச்சின்னத்தில் போட்டியிடுவதற்காக பிப்ரவரி மாதத்திலேயே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்தும் தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கவில்லை. பல்வேறு சின்னங்களை கேட்டும் அவை வேறொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாக தொடர்ந்து தெரிவிக்கிறார்கள். எனவே, ஏதேனும் அரசியல் கட்சிகளின் தலையீடு இருக்குமா என்ற சந்தேகம் உள்ளது.

ஒவ்வொரு முறையும் நான் போட்டியிடும் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளில் டெபாசிட் இழக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது. அதனால், இரு தொகுதிகளிலும், தனிச்சின்னத்தில் போட்டியிடுவது நல்லதல்ல. வாக்குப்பதிவுக்கு குறைந்த நாட்களே உள்ளதால், தனிச்சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வது சிரமமானது. எனவே, விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம் என திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார்.

election commission

அதேசமயம், நாடாளுமன்ற தேர்தலில் புதிய சின்னம் வேண்டும் என விசிக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனவே, புதிய சின்னம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.