• May
    26
    Sunday

Main Area

Main



நடிகைகள் போல் ஒய்யாரமாக வந்த தேர்தல் அதிகாரிகள்: ஒரேநாளில் வைரலானது எப்படி?

ரீனா
ரீனா
Loading...

உத்தரபிரதேசம்:  தேர்தல் பணிக்கு வந்த பெண் அதிகாரிகள் இருவர் பார்ப்பதற்கு நடிகை போல இருந்த தோற்றத்தால் ஒரே நாளில் வைரலாகியுள்ளனர். 

6-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு  7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் வரிசையில் நின்று வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.  இது ஒரு பக்கம் இருக்க  மஞ்சள் நிற புடவை அணிந்தபடி நடிகை போன்ற தோற்றத்தில் தேர்தல் பணிக்கு வந்த  பெண் அதிகாரி ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

reena

அவர் பொதுப்பணித் துறையில்  பணிபுரிந்து வரும் ரீனா திவிவேதி. உத்தரபிரதேச மாநிலம் தியோரியா பகுதியைச் சேர்ந்த இவருக்கு  லக்னோவில் தேர்தல் பணிகள் ஒதுக்கப்பட்டன.இதற்காக, லக்னோவில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்த அவர், வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்துச் சென்ற போது  எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் தான் அது. இந்த புகைப்படம் வெளியான சில நேரங்களுக்குள்ளே ரீனா திவிவேதிக்கு சமூக வலைதளங்களில்  பின் தொடர்பவர்களின்  எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது.  'உமன் ஆன் யெல்லோ சாரி' என்ற ஹேஷ் டேக்குடன் அவரது புகைப்படம்  பகிரப்பட்டது. 

reena

ஒரே நாளில் ஒரே புகைப்படத்தால் அவர் நாடு முழுவதும் பிரபலமடைந்துவிட்ட ரீனாவுக்கு திருமணமாகி 9 ஆம் வகுப்பு படிக்கும்  வயதில் மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

blue girl

அதே போல் போபாலில் கோவிந்தபுராவில் உள்ள ஐஐடியில் உள்ள வாக்குச்சாவடியில்தான் பணிபுரிய வந்தவர் யோகேஷ்வரி கோகித். கனரா வங்கியில் பணியாற்றும் இவரின் புகைப்படமும் வைரலானது. நீல நிற ஆடையில் வந்திருந்த இவரும்  வலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்து ஒரேநாளில் பிரபலமாகியுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.