• July
    17
    Wednesday

Main Area

Main



என்னை வீழ்த்திய ஸ்மிருதி இரானிக்கு வாழ்த்துகள்: ராகுல் காந்தி பேட்டி!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Loading...

மக்களின் தீர்ப்புக்கு சாயம் பூச விரும்பவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். 

rahul

ஏழு கட்டங்களாக நடந்த மக்களவை தேர்தலின் முடிவுகள்  இன்று வெளியாகியுள்ளது. அதில் பாஜக கிட்டத்தட்ட முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில் பாஜக 340க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் மோடி தலைமையில் மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கிறது.

amethi

இதை சற்றும் எதிர்ப்பாராத காங்கிரஸ் கட்சியினர், அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, 'இது மக்களின் முடிவு அதை நான் ஏற்று கொள்கிறேன். நாடு மக்கள் அவர்கள் தீர்ப்பை தெளிவாக கூறிவிட்டார்கள். தேர்தலில் வெற்றி கண்டுள்ள மோடி மற்றும் பாஜகவுக்கு என்னுடைய வாழ்த்துகள். மக்களின் தீர்ப்புக்கு நிறம் கொடுக்க விரும்பவில்லை. என்னை வீழ்த்திய ஸ்மிருதி இராணிக்கு வாழ்த்துக்கள்' என்றார். 

rahul

தொடர்ந்து பேசிய, 'என் மீது எவ்வளவு அவதூறு கூறினாலும் நான் அன்பை மட்டுமே உங்களுக்கு தருவேன். தோல்வியி கண்டு யாரும்  அஞ்ச வேண்டாம். தொடர்ந்து போராடுவோம்' என்று தெரிவித்தார். 

2018 TopTamilNews. All rights reserved.