• 12
    புதன்
  • 12
    டிசம்பர்

Main Area

Main

இங்கிலாந்து இளவரசிக்கு பேய் பிடித்திருக்கிறது: பிரபல பத்திரிகையாளர் அதிர்ச்சி தகவல்

piers morgan

லண்டன்: இங்கிலாந்து இளவரசி மேகன் மெர்க்கலுக்கு பேய் பிடித்துவிட்டதாக பிரபல பத்திரிகையாளர் பியர்ஸ் மோர்கன்(Piers Mogan) தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் ஹரியும், அமேரிக்க நடிகை மேகன் மெர்க்கலும் கடந்த மே மாதம் 19-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களின் திருமணம், உலக அளவில் பெரும் செய்தியாகப் பேசப்பட்டது.

இந்நிலையில், பிரபல பத்திரிகையாளரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான பியர்ஸ் மோர்கன் என்பவர், வணக்கம் பிரித்தானியா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, “மேகன் மெர்க்கல் பிரபல நடிகையாக இருந்தபோதே எனக்கு அவரை நன்றாக தெரியும். அவர் இளவரசர் ஹரியுடன் 2016 ஆம் ஆண்டு டேட்டிங் செல்ல ஆரம்பித்தவுடன் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். 

மெர்க்கல் எப்போது அரசகுடும்பத்து மருமகள் ஆனாரோ அன்றே அவருக்கு பேய்பிடித்துவிட்டது, அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளும் அதனை பிரதிபலிக்கின்றன. அவரது ஒவ்வொரு அசைவுகளும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சொல்லப்போனால், அவர் அரச குடும்பத்து மருமகளாக நடித்துக்கொண்டிருக்கிறார். அவர் ஒரு சிறந்த நடிகை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர் குடும்ப வாழக்கையிலும் நடித்துக்கொண்டிருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது” என பேசியுள்ளார்.

பிரபல பத்திரிகையாளரின் இந்தப் பேச்சு, அரண்மனை வட்டாரத்தை மட்டுமின்றி, இங்கிலாந்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

             
2018 TopTamilNews. All rights reserved.