ஈரோட்டில் விளை நிலங்களில் கருப்புகொடி ஏற்றி, விவசாய சங்கத்தினர் போராட்டம்!

 

ஈரோட்டில் விளை நிலங்களில் கருப்புகொடி ஏற்றி, விவசாய சங்கத்தினர் போராட்டம்!

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து விளை நிலங்கள், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி, விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராடி வரும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட கோரி ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகளின் சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது.

ஈரோட்டில் விளை நிலங்களில் கருப்புகொடி ஏற்றி, விவசாய சங்கத்தினர் போராட்டம்!

இதனையொட்டி, ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் ஏ.எம்.முனுசாமி தலைமையில் விளை நிலங்கள் மற்றும் வீடுகளில் கருப்பு கொடியேற்றி, 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,.

அப்போது, டெல்லியில் போராடும் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, மக்களுக்கு எதிரான சட்டங்களை திரும்ப பெறவும், மின் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதேபோல், காஞ்சிகோவிலில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் துளசிமணி தலைமையில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.