• July
    22
    Monday

Main Area

Mainஇந்துக்களாக பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக சென்று தரிசனம் செய்ய வேண்டிய கோவில் இது... 

அசோகவனம்
அசோகவனம்
Loading...

அந்த இடத்தில் நின்று கொண்டு தற்போது உள்ள நவீன கட்டடங்களையும் கவலைகளையும் மறந்து விட்டு சுற்றிலும் ஒருமுறை பார்த்தோம் என்றால்,நமக்கு  உடல் சிலிர்ப்பது நிச்சயம். யெஸ்...நாம் குறிப்பிடுகிற அந்த இடம் அசோகவனம். ராமாயணத்தில்  ராவணன் சீதையை சிறை வைத்திருந்த அதே அசோகவனம்தான்!
 
ராமாயணத்தில் குறிப்பிட்டுள்ளபடி சீதையைச்  சிறை எடுத்துச் சென்ற இலங்கேஸ்வரனாகிய ராவணன் சீதையை இலங்கையில் உள்ள அடர்ந்த அசோக மரங்கள் நிறைந்த அசோகவன காட்டிற்குள் சிறை வைக்கிறான்.
 

ashoka


அந்த அசோகவனம்,தற்போதைய ஸ்ரீலங்காவின் கண்டி அருகிலுள்ள நுவரேலியாவில் இருக்கிறது.நுவரெலியா என்பது நமது ஊட்டி போன்ற மலைப்பிரதேசம்.நுவரெலியாவில் உள்ள ‘சீதாஹெலியா’வில் சீதை சிறை வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஓர் அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது.அதை சீதையம்மன் கோவில் என்று அழைக்கின்றனர்.
 
ராமாயணத்தை நம்பாதவர்கள் கூட அங்கிருப்பவர்கள் சொல்வதைக் கேட்கும் போதும், அந்த விசயத்தை பார்க்கும்போதும் கண்டிப்பாக நம் எண்ணங்களை மாற்றிக் கொள்ளத்  தோன்றும். உள்ளூர்க்காரர்கள் சொல்லும் அந்த சிலிர்ப்பூட்டும் விசயங்கள் என்னவென்று பார்ப்போம்...

ashoka


 
நுவரெலியா என்பது  ஏதோ சிங்களப் பெயர் போல தோன்றினாலும், உண்மையில் அது ஒரு தமிழ் பெயர்.’நுவர்த்தல்’ என்றால் அணைவது ;அதாவது ‘நெருப்பு அணைவது’என்று பொருள்படும்.நுவரவில்லையா என்றால் இன்றும் நெருப்பு அணையவில்லை என்றே அர்த்தம்.

அந்த ‘நுவரல்லயா’ என்ற பேச்சு தமிழே மருவி ‘நுவரெலியா’ என்ற   சிங்களத் தனமான பெயராக மாறியது.அதற்கேற்றார் போல் சீதாஹெலியாவில் உள்ள அசோக மரக்காடுகளின்  மண்ணின்  நிறம் முழுமைக்கும்,பெரும் நெருப்பு பிடித்து அணைந்தது போன்று  கருமை நிறமாகவே இருக்கின்றது!அனுமன் மூட்டிய நெருப்பால்தான் அப்படி உள்ளது என்று அங்குள்ள மக்கள் சொல்கின்றனர். 

ashoka


 
நம்மூரில் அசோகமரம் என்று ‘நெட்டிலிங்கம்’ எனப்படும் ஒரு ஊசியிலைக்காட்டு அழகு தாவரத்தைதான் சொல்லுகிறோம்.உண்மையான அசோகமரம் என்னவென்று அங்கு போனால்தான் தெரிகின்றது. 

அந்த சீதாஹெலியாவைச் சுற்றிலும் அடர்ந்த அசோக மரக்காடுகள்தான். அதனால்தான் ‘அசோகவனம்’ என பெயர் பெற்றுள்ளது. அங்குள்ள வனத்துறை அனுமதி பெற்று அசோக வனத்திற்குள் சென்று பார்த்து வரலாம். சீதையம்மன் கோவிலுக்கு உள்ளே ஒரு அசோக மரம் தலவிருட்சமாக உள்ளது.பக்தர்கள் கடவுள் போல அந்த மரத்தையும் வணங்குகின்றனர். சீதையம்மன் கோவில் அமைந்திருப்பதே ஒரு ரம்மியமான சூழலில்தான்

ashoka


 
அசோகவன மலையடிவாரத்தில் வளைந்து,நெளிந்து ஓடி வரும் ஒரு அழகிய சிற்றோடையின் கரையில் தங்க நிறத்திலான அந்தக் கோவில் அமைந்துள்ளது. அந்த அழகிய நீரோடையில் தான் சீதை தினமும் குளித்ததாக சொல்லுகிறார்கள்.
 
ராமனை பிரிந்து கவலையில் அந்த ஓடையின் கரையில் சீதை இருக்கும் பொழுதுதான் அனுமன் சீதையை சந்தித்து வணங்கி ராமனின் கணையாழியை அடையாளமாக சீதையிடம் கொடுத்து, சீதையை மீட்க இராமன் வந்து கொண்டு இருக்கும் தகவலை சொல்லுகின்றான் அனுமன். 

ashoka


 
சீதையை சந்தித்த அந்த நீரோடையின் கரையில்,அனுமன் சீதையை சந்தித்து வணங்குவது போன்ற சிலை வைக்கப்பட்டுள்ளது.அந்த ஓடையின் பாதையில் அனுமனின் கால்தடம் என சொல்லப்படும் பிரம்மாண்டமான கால்தடங்கள் இன்னும் ஆங்காங்கே காணப்பட்டு பிரமிப்பூட்டுகின்றன.மேலும் நுவரெலியாவில் வேறு எங்கும்  காணாதபடிக்கு அங்கு கோவிலை சுற்றிலும் குரங்குகள் காணப்படுகின்றன. 
 
கோயிலின் பெயர் சீதையம்மன் கோவில் என்றாலும், கோவிலின் உள்ளே சீதையுடன் ராமனும் சேர்ந்தே காட்சியளிக்கின்றார். காரணம் கேட்டபோது.. இராமனைப் பிரிந்து இங்கே தனியே வாடிய சீதை,இனி சிலையாகக்கூட பிரியக் கூடாது என்பதற்காக இருவருக்கும் சேர்ந்தே சிலை அமைத்ததாக சொல்லுகிறார்கள்.
 
கோயிலின் உள்ளே மூலஸ்தானத்தில் உள்ள சிலை சமீபத்தில் அமைக்கப்பட்டது. அதன் அருகே உள்ள கருவறையில் உள்ள ராமன்,சீதை சிலையே பாரம்பரிய பூர்விக சிலை. இந்துக்களாக பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக சென்று தரிஷிசிக்க வேண்டிய இடம் நுவரெலியாவின் ‘சீதாஹெலியாவில் உள்ள சீதையம்மன் கோவில். 

ashoka


 
ஸ்ரீலங்கா நுவரெலியா என்றதும் பயந்து விட வேண்டாம். நம் இந்தியாவின் வட மாநிலங்களுக்கு செல்வதைவிட ஸ்ரீலங்கா நமக்கு மிக அருகில்தான் இருக்கிறது.சென்னை,திருச்சி,மதுரையில் இருந்து ஸ்ரீலங்காவின் தலைநகரம் கொழும்பு வெறும் ஒரு மணிநேர விமானப் பயணம்தான்.
 
கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு பேருந்திலோ,காரிலோ 4 மணி நேரம்பயணம். தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதி என்பதால் மொழிப் பிரச்சினை,உணவுப் பிரச்சினை கிடையாது பட்ஜெட்டிலேயே தான் விடுதிகள் கிடைக்கின்றன.

ashoka


 
ஈழத் தமிழர்கள் வசிக்கும் ஸ்ரீலங்காவின் வடகிழக்கு மாநிலங்களுக்கும்,இந்த மலைப்பகுதிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.யாழ்ப்பாணம்,சென்னை என்றால் கண்டி மாவட்டம் திருநெல்வேலி என்று கணக்கு  வைத்துக்கொள்ளுங்கள். இங்கு வசிக்கும் தமிழர்கள் அனைவரும் தமிழ் நாட்டை விட்டுச் சென்ற இந்திய வம்சாவழித் தமிழர்களே.
 
இதுதவிர ஊட்டியை போன்ற நுவரெலியாவிலும்,கண்டியிலும்,ஹட்டனிலும், மாத்தளையிலும் ஏராளமான டூரிஸ்ட் அட்ராக்சன் உள்ளது.அதை வேறு பதிவில் பார்ப்போம்...

இதையும் படிங்க: விண்ணை பிளக்கும் 'கோவிந்தா' முழக்கத்துடன் ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

2018 TopTamilNews. All rights reserved.