• October
    18
    Friday

Main Area

Main



தேர்தலில் தில்லுமுல்லு... கண்டுக்காத தேர்தல் ஆணையம்- ஈவிகேஎஸ் இளங்கோவன்

evks
evks

தேனி மக்களவை தொகுதியில் பல தில்லுமுல்லுகள் நடந்துள்ளன என அத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சென்னை சத்திய மூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், “என் தோல்வி உருவாக்கப்பட்ட தோல்வி; அதிகாரம் மற்றும் பண பலத்தால் தோற்கடிக்கப்பட்டேன். வாக்களித்த தேனி தொகுதி  மக்களுக்கும்,  உழைத்த கூட்டணிக் கட்சியினருக்கும் நன்றிகள்.

 தேனியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த சில ஆவணங்கள் எனக்கு கிடைத்திருக்கின்றன.  பணப்பட்டுவாடா குறித்து பல முறை புகாரளிக்கப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.

பல மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ‘சீல்’ இல்லை; கேட்டால் ‘அரக்கு’ கீழே விழுந்துவிட்டதாக கூறினர். இவ்வளவு தில்லுமுல்லுகள் நடைபெற்றும் பெரியகுளத்தில் நான் அதிக வாக்குகள் பெற்றிருக்கிறேன்” எனக்கூறினார். 
 

2018 TopTamilNews. All rights reserved.