• February
    22
    Friday

Main Area

Main

பேருந்து நிலையத்தில் கூவி கூவி பழங்கள் விற்கும் அதிமுக முன்னாள் கவுன்சிலர்: அதிர்ச்சி தரும் உண்மை!

admk
admk
Loading...

மதுரை: அதிமுக கவுன்சிலராக 5 வருடம் பொறுப்பில் இருந்த பெண் ஒருவர் தற்போது மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் கூவி கூவி பழம் விற்றுவருகிறார்.

முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் மாரியம்மாள்  தீவிர அதிமுக விசுவாசி. 1981ஆம் ஆண்டு 1981ஆம் ஆண்டு முதல்  அப்பகுதிகளில் நடக்கும் கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது, கட்சியின் போராட்டங்களில் முன் நிற்பது என ஈடுபாட்டுடன் கட்சி பணியில் இருந்துள்ளார்.

இதனால் கடந்த 2011 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் 35 வது வார்டில் கவுன்சிலராக போட்டியிடும் வாய்ப்பை மாரியம்மாளுக்கு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழங்கி உள்ளார். அந்த தேர்தலில் 2369 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற மாரியம்மாள் 5 வருடம் முழுமையாக கவுன்சிலராக இருந்துள்ளார். கவுன்சிலராக இருந்த அந்த 5 வருட காலத்தில் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. கவுன்சிலர் பதவிக்காலம் முடியும் போது வரை மாரியம்மாள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சொத்து ஏதும் சேர்க்கவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது கணவர் முனியாண்டி  இறந்துவிட வாழ்வாதாரத்துக்காக, தினமும் மதுரை மார்க்கெட்டில் பழப் பெட்டிகளை வாங்கி வந்து கூடையில் வைத்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் கூவி கூவி விற்று வருகிறார்.

அரசு வேலையின் கடைநிலை ஊழியர் முதல் அதிகாரிகள் வரை எதற்கெடுத்தாலும் பணம் பார்த்துப் பிழைக்கும் இந்த காலத்தில் 5ஆண்டுகளாக கவுன்சிலர் பகுதியில் இருந்தும் நேர்மையாக இருந்து, தற்போது பிழைப்பிற்காக பழங்கள் விற்கும் மாரியம்மாளை அப்பகுதிவாசிகள் பாராட்டி வருகின்றனர்.
 

2018 TopTamilNews. All rights reserved.