• May
    23
    Thursday

Main Area

Main



முடங்கியது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்: டிவிட்டர் பக்கம் குவியும் பயனர்கள்!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம்
பேஸ்புக், இன்ஸ்டாகிராம்
Loading...

உலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளின் சேவை  தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள், பயன்படுத்தும் சமூக வலைதளம் பேஸ்புக். நள்ளிரவு முதல் அதிகாலை வரை பேஸ்புக்கில் பொழுதை கழிக்கும் மக்களும், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களை வணிக நோக்கில் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றது. 

முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள்:
fab tt

இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் முடங்கியுள்ளது. நேற்று இரவு முதல் பேஸ்புக்கில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், புதிய பதிவுகளை பதிவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

சைபர் தாக்குதலால் ஏற்படவில்லை:
fb ttn

இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள பேஸ்புக் நிறுவனம், 'பாதிக்கப்பட்ட சேவையை சீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சேவை விரைவில் சரி செய்யப்படும் என்றும் இது சைபர் தாக்குதலால் ஏற்படவில்லை' என்றும் விளக்கமளித்துள்ளது. 

இன்ஸ்டாகிராம் விளக்கம்:
insta ttn

இதை தொடர்ந்து இன்ஸ்டாகிராமும் சேவை முடக்கத்துக்கு விளக்கமளித்துள்ளது, ‘ இன்ஸ்டாகிராம் பக்கத்தை இயக்குவதில் மக்களுக்குச் சிக்கல் உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். இது வெறுப்பூட்டக்கூடியது என்பதும் எங்களுக்குத் தெரியும். விரைவில் இதைச் சரி செய்ய உழைத்து வருகிறோம்'  என்று குறிப்பிட்டுள்ளது.

 

டிவிட்டர் பக்கம் குவிந்த பயனர்கள்:

 

இந்த இரு சமூகவலைதள பக்கங்களும் முடங்கி சுமார் 8 மணி நேரங்களும் மேல் ஆகிறது. இதனால்  டிவிட்டர் பக்கம் குவிந்துள்ள இணையவாசிகள் #instagramdown, #FacebookDown என்ற ஹேஸ்டேக்குகளில் கருத்துகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.