• March
    24
    Sunday

Main Area

Main



இந்திய இசை நிறுவனங்களுடன் கூட்டணி அமைக்கும் ஃபேஸ்புக்!

fb
fb
Loading...

டெல்லி: இந்தியாவின் முன்னணி இசை நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட போவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி இசை நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட போவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகவே இனி ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வாடிக்கையாளர்கள் தாங்கள் பதிவிடும்  கமெண்ட்களில் பாடல்களையும் பயன்படுத்த முடியும்.

டி-சீரிஸ் மியுசிக், ஜீ மியுசிக் மற்றும் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் போன்ற இசை நிறுவனங்களுடன் பேஸ்புக் நிறுவனம் இணைவதால் 300 மில்லியன் இந்திய ஃபேஸ்புக் பயனர்களுக்கு தங்களது விருப்பமான பாடல்களை பதிவிட முடியும்.

இந்த வசதியால் பயனர்கள் தங்கள் நினைவுகளை இன்னும் உணர்ச்சிபூர்வமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஃபேஸ்புக் மூலம் பகிர முடியும் என்று என ஃபேஸ்புக் இந்தியாவின் பார்ட்னர்ஷிப் இயக்குநர் மனிஷ் சோப்ரா கூறியுள்ளார். மேலும் சுமார் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஃபேஸ்புக் நிறுவனம் இதுபோன்று இசை நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து செயல்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.