Main Area

Main

முஹூரத் வர்த்தக முடிவில் பங்கு சந்தை குறியீடுகள் உயர்வு

muhurattrading

மும்பை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் முஹூரத் வர்த்தக முடிவில் பங்கு சந்தை குறியீடுகள் உயர்வில் முடிந்தன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் “முஹூரத்” வர்த்தகம் நவம்பர் 7-ம் தேதி (இன்று) மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடைபெற்ற பங்கு சந்தை குறியீடுகள் பல புள்ளிகள் உயர்ந்து உச்சத்தை தொட்டன.

இந்திய பங்கு சந்தைகள் இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 0.70 சதவீதம் அல்லது 245.77 உயர்ந்து 35237.68 புள்ளிகளை எட்டியது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 0.65 சதவீதம் அல்லது 68.40 உயர்ந்து 10598.40 புள்ளிகளை எட்டியது.

இன்றைய வர்த்தகத்தில் 1,925 பங்குகள் உயர்வையும், 439 பங்குகள் சரிவையும் கண்டன. இன்ஃபோசிஸ் (+9%), மஹிந்த்ரா & மஹிந்த்ரா M&M (+15%) மற்றும் எச்.பி.சி.எல் HPCL (+1.5%) நிறுவனங்களின் பங்குகள் பங்கு வர்த்தக பட்டியலில் முதல் இடங்களைப் பெற்றன. ஆக்ஸிஸ் வங்கி (-0.10%) பங்குகள் சரிவடைந்து நஷ்டத்தில் முடிவடைந்தது.

2018 TopTamilNews. All rights reserved.