• 12
    புதன்
  • 12
    டிசம்பர்

Main Area

Main

ஃபிளிப்கார்ட் ‘பிக் ஷாப்பிங் டேஸ்’ தொடங்கியது...ரூ.20,000 வரை ஸ்மார்ட்போன்கள் விலையில் தள்ளுபடி!

flipkart

மும்பை: பிளிப்கார்ட் தளத்தில் ‘பிக் ஷாப்பிங் டேஸ்’ சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது.

பிளிப்கார்ட் தளத்தில் ‘பிக் ஷாப்பிங் டேஸ்’ சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் மின்சாதன பொருட்களுக்கு அதிரடி சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் மேற்கண்ட பொருட்களுக்கு எளிய மாத தவணை முறை வசதி, எக்சேஞ்ச் சலுகை அளிக்கப்படுகிறது. இன்று (நவம்பர் 6) தொடங்கி நவம்பர் 8-ஆம் தேதி வரை இந்த பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனை நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு விற்பனையில் போகோ எஃப்1, மோட்டோ X4, மோட்டோரோலா ஒன் பவர், ஹானர் 10, அசுஸ் சென்ஃபோன் 5இசட், கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL, எல்.ஜி. ஜி7 தின்க் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்கள், டேப்லெட் மற்றும் பல்வேறு இதர மின்சாதனங்கள் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. கூகுள் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன் ரூ.5000 தள்ளுபடி விலையில் தற்போது ரூ.34,999-க்கு விற்கப்படுகிறது.

மேலும், நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போன் ரூ.18,000 வரை விலை குறைக்கப்பட்டு தற்போது ரூ.36,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல எல்.ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,000 வரை குறைக்கப்பட்டு உள்ளது.

இவை தவிர பல்வேறு பிராண்டு ஸ்மார்ட்போன்களும் தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன. மேலும், ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் வசதியையும் ஃபிளிப்கார்ட் அளிக்கிறது.

             
2018 TopTamilNews. All rights reserved.