மட்டன் சுக்கா சாப்பாடு புகழ்,.. செக்கானூரணி ராணி விலாஸ்

 

மட்டன் சுக்கா சாப்பாடு புகழ்,.. செக்கானூரணி ராணி விலாஸ்

மதுரையில் இருந்து தேனி போகும் சாலையில் பத்துக் கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது செக்காணூரணி.இந்த ஊரில் 60 ஆண்டுகாலமாக இயங்கி வருகிறது இந்த சின்னஞ்சிறு அசைவ உணவகம். அதிகம் போனால் ஒரே சமையத்தில் 20 பேர் சாப்பிடலாம் அவளவுதான் இடவசதி.

மதுரையில் இருந்து தேனி போகும் சாலையில் பத்துக் கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது செக்காணூரணி.இந்த ஊரில் 60 ஆண்டுகாலமாக இயங்கி வருகிறது இந்த சின்னஞ்சிறு அசைவ உணவகம். அதிகம் போனால் ஒரே சமையத்தில் 20 பேர் சாப்பிடலாம் அவளவுதான் இடவசதி.

rani-vilas-front

சமைப்பதும் மூன்று தலைமுறையாக வரும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே. தினமும் மதியம் 12 மணிக்குத் திறந்து மாலை 4 மணிக்கு மூடி விடுகிறார்கள். உணவு வகைகளும் பெரிய பட்டியல் ஒன்றும் இல்லை. சாப்பாடு மட்டுமே. அதையே மட்டன் சுக்கா சாப்பாடு,குடல் குழம்பு சாப்பாடு, நல்லிக்குழம்பு சாப்பாடு என்று மூன்று காம்போவாகத் தருகிறார்கள்.

இவை தவிர,சுவரொட்டி, ரத்தப் பொரியல் உண்டு. சாப்பாட்டுடன் ஒரு கூட்டு , பொரியல் தருகிறார்கள். சாம்பார் ரசம், மோர் உண்டு.இதன் விலை 70 ரூபாய். சுக்கா 100 ரூபாய், குடல் 90 ரூபாய், நல்லி 70 என்று எல்லாம் கைக்கடக்கமான விலைதான். சுவரொட்டி 60 ரூபாய், ரத்தப் பொரியல் 30 ரூபாய்,  கரண்டி ஆம்லெட் 15 ரூபாய்.

rani-vilas-hotel-09

சாப்பாட்டோடு பிசைந்து சாப்பிட,இந்த உணவகத்தில் பெரும்பாலோர் தேர்வு செய்வது மட்டன் சுக்காவைத்தான்.இதை செமி கிரேவியாக தருகிறார்கள். போதுமான காரத்துடன், நாவூற வைக்கும் மணத்துடன் இருக்கும் மட்டன் சுக்கா முதலிடத்தைப் பிடித்தததில் ஆச்சரியமில்லை. ஆனால் அதற்காக குடல் குழம்பும் நல்லிக் குழம்பும் குறைந்தவை அல்ல. அவற்றில் குடல் குழம்பு மண் மணத்துடன் எந்த அலங்காரமும் இல்லாமல் இருக்கிறது. தேங்காய் அரைத்து சேர்த்திருப்பதால் கொஞ்சம் காரம் குறைவாக இருக்கிறது.

blood-poriyal

அடுத்து வரும் நல்லிக் குழம்பு, உங்களுக்குள் இருக்கும் ராஜ் கிரணை வெளிக்கொண்டு வந்தே தீரும். நயமான காரத்துடன், எல்லா எலும்புகளும் நன்கு வெந்து இருப்பதால் நீங்கள் கடித்துக் குவிக்கலாம். மதுரையில் எத்தனையோ பெயர் பெற்ற உணவகங்கள் இருக்கின்றன. அவற்றில் பலவும் நவீன அவதாரம் எடுத்து , அசல் மதுரை ருசியை விட்டு விலகிப்போய் விட்டன.ஆனால், இந்தச் செக்கானூரணி ராணிவிலாஸ் இன்னும் அதே எளிமையான மதுரை கைமணத்துடன் இருக்கிறது. மதுரையில் இருந்து பத்துக் கி.மிதான். இதற்காகவே போய் சாப்பிட்டு வந்தால்கூட தப்பில்லை.