நோன்புக் கஞ்சியின் வரலாறு தெரியுமா…!
ரமலான் மாதத்தில் இஸ்லாமியர் 30 நாள் விரதமிருப்பார்கள்,அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளோருக்கு நோம்பு கஞ்சி தருவார்கள் தெரியும்.அந்த நோம்புக்கஞ்சிக்கு ஒரு வரலாறு இருக்கிறது என்பதும்,அதை உருவாக்கியவர் கடையநல்லூரைச் சேர்ந்த ஒரு தமிழ் இஸ்லாமியர் என்பதும் தெரியுமா?
ரமலான் மாதத்தில் இஸ்லாமியர் 30 நாள் விரதமிருப்பார்கள்,அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளோருக்கு நோம்பு கஞ்சி தருவார்கள் தெரியும்.அந்த நோம்புக்கஞ்சிக்கு ஒரு வரலாறு இருக்கிறது என்பதும்,அதை உருவாக்கியவர் கடையநல்லூரைச் சேர்ந்த ஒரு தமிழ் இஸ்லாமியர் என்பதும் தெரியுமா?
இன்று மியன்மார் என்று அழைக்கப்படும் பர்மாவில் உணவகம் நடத்திக்கொண்டு இருந்தார் முகமதலி.அப்போதெல்லாம், நோன்பு முடிக்க எல்லா பர்மியரையும் போல் முகமதலியும் வெறும் அரிசி கஞ்சிதான் குடிப்பது வழக்கம்.
நாள் முழுவதும் விரதமிருந்து மாலை அருந்தும் உணவு எளிதில் செரிக்கக் கூடியதாய் இருக்க வேண்டும் என்று நினைத்த முகதலி அதில் வெங்காயம், சீரகம்,இஞ்சி பூண்டு என்று புதுப்புது சேர்மானங்களுடன் கஞ்சி தயாரித்து தனது கடையில் வைத்து விற்கத் தொடங்கினார்.
தினந்தோறும் வாடிக்கையாளர்கள் கருத்தைக் கேட்டு கஞ்சியின் சுவையை மெருகூட்டிக்கொண்டே வந்தார்.ஆனால் இரண்டாவது உலகப் போரில் பர்மா ஜப்பானிய படைகளால் ஆக்கிரக்கப்பட்ட நேரத்தில் முகமதலி இந்தியாவுக்கு திரும்பிவந்து தனது சொந்த ஊரான கடையநல்லூர் வந்து சேர்ந்து,இங்கும் ஒரு உணவகம் துவங்கினார்.
அந்த உணவகத்தில்தான் நோன்புக்கஞ்சி இன்றிருக்கும் வடிவத்தையும் ருசியையும் அடைந்தது.இது நடந்தது 1948 வாக்கில்.அதற்குப்பிறகு அந்த நோம்புகஞ்சியின் சுவையும் வாசனையும் கடையநல்லூர், குற்றாலம், செங்கோட்டை ,புனலூர் வழியாக கேரளத்தில் பற்றிப் படர்ந்து விட்டது.
அதை மலையாளிகள் அரேபியாவுக்கு கொண்டுபோய் சேர்க்க,இன்று உலகெங்கும் பரவிவிட்டது.வெவ்வேறு சுவைகளில் இன்று தயாரிக்கப்பட்டாலும்,இப்படி உலகம் முழுக்க தயாரிக்கப்படும் ஒரு உணவு வகையை உருவாக்கிய முகமது அலி நம்ம கடையநல்லூர் பாய் என்பது தமிழர்கள் எல்லோருக்கும் பெருமைதானே.