வீடே மனக்கிறமாதிரி எலும்புக் குழம்பு..!

 

வீடே மனக்கிறமாதிரி எலும்புக் குழம்பு..!

இது கொஞ்சம் பொறுமையாக செய்ய வேண்டிய ரெசிப்பி,அதற்கேற்ற ரிவார்ட் சட்டியை வழித்து நக்கும்போது கிடைக்கும்.

இது கொஞ்சம் பொறுமையாக செய்ய வேண்டிய ரெசிப்பி,அதற்கேற்ற ரிவார்ட் சட்டியை வழித்து நக்கும்போது கிடைக்கும்.

வேகவைக்க வேண்டியவை:

சதையுடன் கூடிய நல்லி எலும்பு ¾ கிலோ.
சின்ன வெங்காய 50 கிராம்
கரிவேப்பிலை ஒரு இனுக்கு
இஞ்சி,பூண்டு 100 கிராம்,தட்டிவைத்தது
மஞ்சள் தூள்
உப்பு

nalli

இவை அனைத்தையும் ஒரு பிரஷர் பேனில் போட்டு ½ லிட்டர் தண்ணீர் விட்டு ஒரு டீஸ்பூன் உப்புச் சேர்த்து எட்டு விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

வறுத்து அரைக்க:

கொத்துமல்லி விதை 4 டீ ஸ்பூன்
சீரகம் 1 டீ ஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
காய்ந்த மிள்காய் 10
கரிவேப்பிலை ஒரு ஈர்க்கு
சின்ன வெங்காயம் 200 கிராம்
நல்லெண்ணெய் 2 டீ ஸ்பூன்

nalli-gravy

இவற்றை ஒரு கடாயில் கொடுக்கப்பட்டு உள்ள எண்ணெய் விட்டு சிறு தீயில் கருகாமல் வறுத்து ,ஆறவைத்து மையாக அரைத்து வைத்து கொள்ளவும். இப்போது, மூன்று பெரிய வெங்காயங்களை எடுத்து நீளவாக்கில் மெல்லிசாக வெட்டிக் கொள்ளவும்.பட்டை சிறு துண்டு,கல்பாசி,கிராம்பு,சோம்பு ஒரு ஸ்பூன்,கறிவேப்பிலை ஒரு கொத்து எடுத்துக்கொண்டு,

ஒரு கடாயை அடுப்பில் ஏற்றி,அது சூடானதும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு,கடுகு,சோம்பு மற்ற மசாலாப் பொருட்களை சேர்த்து தாளித்து,வெட்டி வைத்துள்ள வெங்காயத்தைச் சேர்த்து,அது பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்
இப்போது,அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து மேலும் ஒரு இரண்டு நிமிடம் புரட்டி விட்டு,பிரஷர் பானில் வெந்து தயாராக இருக்கும் நல்லி எலும்பை இதில் கொட்டி சிறிதளவு உப்புச் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் வீடே மணக்கும்

News Hub