• 12
    புதன்
  • 12
    டிசம்பர்

Main Area

Main

எவ்வளவு காலம் வாழ்வீர்கள்? நெற்றிக் கோடுகள் சொல்லும் ரகசியம்!

foreheadlines

ஒருவரின் நெற்றியை வைத்தே அவர்களின் குணத்தை சொல்லிவிடலாம். அதேபோல், அதிலுள்ள வரிகளை வைத்து அவர் எத்தனை ஆண்டுகள் வரை வாழ்வார் என்றும் கூறிவிடலாம்.

சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, மூன்று வகையான நெற்றிகள் உள்ளன. புடிப்பான நெற்றி, வெற்று நெற்றி, அடி நெற்றி. இந்த நெற்றிகளில் இருக்கும் கோடுகளை வைத்து நாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று கூட கூறி விட முடியுமாம். நமது நெற்றியை நன்கு அலசிக் கொள்ள வேண்டும். பின், கண்களை குறுக்கிக் கொண்டு பார்த்தால் நெற்றியில் உள்ள கோடுகள் தெரியும்.

foreheadline

புடைப்பு நெற்றி (Embossed forehead):

வழக்கத்தை விட சற்று புடைப்பாக இருக்கும். மென்மையாக, கோடுகள் நன்றாக தெரியும் வண்ணம் சுத்தமாக இருக்கும்.

வெற்று நெற்றி (Plain Forehead):

தலைக்கும், முகத்துக்கும் தொடர்புடையதாக இருக்கும். கோடுகள் தோன்றும் ஆனால், அவற்றை கண்டறிவது கடினம்.

அடி நெற்றி (Lower Forehead):

சற்றே உள்வாங்கிய படி இருக்கும். தோல் நிறத்தை விட அடர்ந்த நிறத்தை கொண்டிருக்கும். அதில் கோடுகளை கண்டறிவது கடினம்.

forehead

நெற்றியில் இருக்கும் கோடுகளை வைத்து எப்படி வாழ்நாளை கணிப்பது.?

60- 65 வயது:

நெற்றியில் இரண்டு அடர்ந்த ஆழமான கோடுகள் இருப்பின் 60- 65 வயது வரை வாழ்வார்களாம். இவர்கள் ஆளுமை திறன் கொண்டவர்களாகவும், புகழ் மற்றும் செழிப்புடன் வாழ்வார்கள். ஏதேனும் ஒரு கோடு அல்லது இரண்டு கோட்டிலுமே வெட்டுகள் இருந்தால் அவர் போராட்டங்களை சந்திக்கக் நேரிடும்.

75 வயதுக்கு மேல்:

நன்கு தெரியக் கூடிய மூன்று கோடுகளை பெற்றிருப்பின், அவர் 75 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் வரை வாழ்வார். அவர்கள் நல்லதொரு வாழ்க்கை பயனத்தை அனுபவிப்பார்கள்.

அடி நெற்றி 75 வயது வரை:

சுமார் நான்கு கோடுகள் கொண்ட, சற்றே உள்வாங்கிய அடி நெற்றி கொண்டவர்கள் சுமார் 75 ஆண்டுகள் வரை வாழ்வார்களாம்.

வெற்று நெற்றி 100 வயது:

ஐந்து கோடுகளும், அதில் சில வெட்டுகளும் கொண்ட வெற்று நெற்றி கொண்டவர்கள், நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வார்கள். ஒரு நூற்றாண்டு வரை அதாவது 100 வயது வரை இவர் வாழ்வார்கள்.

புடைப்பு, அடி நெற்றி:

புடைப்பு மற்றும் அடி நெற்றி கொண்ட பல வெட்டுகளுடன் கூடிய சுமார் 5 கோடுகள் வரை கொண்டவர்களின் ஆயுட்காலம் குறைவாம்.

forehead

 

கோடுகள் இல்லாமை:

நெற்றியில் கோடுகள் இல்லாமல் இருப்பவர்களுகும் ஆயுட்காலம் குறைவாம். 45-50  ஆண்டுகள் வரை மட்டுமே வாழும் அவர்கள், வாழ்க்கையில் நிறைய கஷ்டத்தையும் அனுபவிப்பார்களாம்.

அதேபோல், நெற்றியின் வடிவமைப்பை வைத்தும் குணாதிசயங்களை கூற முடியும் என்கிறார்கள். அதன்படி, அகலமான நெற்றி கொண்டவர்கள் விஷயங்களை விரைந்து கத்துகொள்ளும் திறன் கொண்டவர்களாக இருப்பர். குறுகிய நெற்றி கொண்டவர்கள் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும், நீங்கள் மனதை கேட்டே முடிவு எடுப்பவர்களாகவும் இருப்பர்.

நேர் நெற்றி கொண்டவர்கள் எதையும் விடாமுயற்சியுடன் கையாள்வார்கள். வளைந்த நெற்றியுடையவர்கள் எல்லார் கவனத்தையும் ஈர்ப்பார்கள். இரட்டை வளைவு நெற்றியுடையவர்களுக்கு கற்பனை திறன் அதிகம். மலை வடிவ நெற்றி கொண்டவர்கள் தன்னம்பிக்கை கொண்டவர்கள். அதேபோல், கூர்மையான நெற்றி கொண்டவர்கள் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பர்.

             
2018 TopTamilNews. All rights reserved.