• May
    26
    Sunday

Main Area

Main



கோல்ஃப் பந்துகளைத் திருடும் நரி : வியப்பான சம்பவம்: வைரல் வீடியோ!

golf
golf
Loading...

மாசச்சுசெட்ஸ்: அமெரிக்காவில்  கோல்ஃப் பந்துகளைத் திருடும் நரியின் வீடியோ காட்சி ஒன்று  வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மாசச்சுசெட்ஸ் மாகாணத்தில் உள்ள மைதானம் ஒன்றில் கோல்ஃப் ஆட்டம் ஆடுகின்றனர். அப்போது  கோல்ஃப் ஆட்டத்தைத் தினமும்  தொலைவில் இருந்து இரண்டு நரிகள் பார்ப்பதாக கூறப்படுகிறது. பின் பந்து அருகே வந்தவுடன், ஒரு நரி ஓடிச்சென்று பந்தை திருடி ஒளித்து வைத்துள்ளது. இந்நிலையில் இது குறித்த வீடியோ ஸ்ப்ரிங்ஃபீல்டு கண்ட்ரி கிளப்பின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. 

'கோல்ஃப் போட்டியில் பங்கேற்ற வேண்டும் என்று நரிகள் விரும்புகிறது. தொடர்ந்து பல நாட்களாகவே கோல்ஃப் பந்துகளை எடுத்து ஒளித்து வைத்துக் கொள்கிறது' என்று கோல்ஃப் கிளப்பில் விளையாடும் டவுனி என்ற கோல்ஃப் வீரர் வேடிக்கையாகக் கூறியுள்ளார். தற்போது  கோல்ஃப் பந்தை நரி தூக்கிச் செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.