• July
    20
    Saturday

Main Area

Main



பிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராம் குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?

கணேஷ் வெங்கட்ராம்-நிஷா
கணேஷ் வெங்கட்ராம்-நிஷா
Loading...

சென்னை: கணேஷ் வெங்கட்ராம் தனது குழந்தையின் பெயர் குறித்து அறிவித்துள்ளார். 

அபியும் நானும், உன்னைப் போல் ஒருவன், கோ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர் கணேஷ் வெங்கட்ராம் . பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனது அமைதியான குணத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். 

இவரும் நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகையுமான நிஷா காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து சமீபத்தில் இந்த தம்பதிகளுக்குப் பெண் குழந்தை பிறந்ததாக அறிவித்தனர். அவர்களுக்குத் திரை பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில், கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் நிஷா தம்பதியினர் தங்களது மகளுக்கு சமைரா என்று பெயர் வைத்துள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர். சமைரா என்றால், கடவுளின் அருள், அழகின் தெய்வம், கடவுளின் தேர்வு ஒன்று என்று அர்த்தம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெயர் வைக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.