• 12
    புதன்
  • 12
    டிசம்பர்

Main Area

Main

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: கவுதம் காம்பீர் அறிவிப்பு

gautamgambhir

டெல்லி: சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஒய்வு பெற விரும்புவதாக கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் அறிவித்துள்ளார்.

கடந்த 1981-ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த கவுதம் காம்பீர், 2003-ஆம் ஆண்டில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் முதன்முதலாக இந்திய அணியில் களம் கண்டார். அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் களம் கண்ட காம்பீர், ஆறு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு, ஆறு போட்டிகளிலும் வெற்றியை பெற்று தந்தவர்.

ஐந்து டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற காம்பீர், 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,154 ரன்களும், 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,238 ரன்களும் குவித்துள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற காரணமாக இருந்த காம்பீர், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஒய்வு பெற விரும்புவதாக கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், "மிகவும் கடினமான முடிவுகள் எப்போதும் கனத்த இதயத்துடன் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில், கனத்த இதயத்துடன், கிரிக்கெட் என்ற அழகான விளையாட்டில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளதாக" பதிவிட்டுள்ளார்.

             
2018 TopTamilNews. All rights reserved.