• June
    27
    Thursday

Main Area

Main



இந்த 5 உணவை மறக்காம சாப்பிடுங்க: முடியை பாதுகாப்பா வச்சிக்கலாம்!

 முடி கொட்டும் பிரச்னை
முடி கொட்டும் பிரச்னை
Loading...

சிலருக்கு முடி கொட்டும் பிரச்னை பெரும் தலைவலியாக இருக்கும். அதற்கு காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடு தான். முடி உதிர்வதைப் போக்கச் சிலர் ஆயில் மசாஜ், ஹேர் ஸ்பா என்று எது செய்தும் பலனில்லாமல் சோகத்தில் மூழ்கி கிடப்பார்கள். கவலை வேண்டாம் உணவுகள்  மூலமாகவே உங்கள் முடி உதிவை நீங்கள் எளிதில் கட்டுப்படுத்தலாம்

பூசணி விதைகள் 

பூசணி விதையில் துத்தநாகம் நிறைந்துள்ளது.இது முடியில் உள்ள செல்களை பாதுகாக்கிறது. மேலும் இது பொடுகு வராமல் தடுக்க உதவுகிறது. அதனால் இதை உணவில் சேர்த்து கொள்வதால் முடி உதிர்வை தடுக்கலாம். 

ஆவகேடோ 

அதில்  செம்பு அதிக அளவில் உள்ளதால் முடி வளர்ச்சிக்கும், அடர்த்திக்கும் உதவுகிறது. மேலும் இதை உண்பதின் மூலம் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தி முடியை பாதுகாக்கும். 

முட்டை 

முட்டையில்  உள்ள புரோட்டீன் மற்றும் பயோட்டீன் முடி வளர்ச்சிக்கு உகந்தது. முட்டையின் வெள்ளைக்கருவை குளிக்கும் முன் தலையில் தேய்த்துஊற வைப்பதின் மூலம் முடி மிருதுவாகவும் பளபளப்பாகவும்  மாறும்.  


பெர்ரீஸ் 

இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் முடி உடையாமல் தடுக்கிறது. மேலும் இதில் விட்டமின் சி மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன.


செம்பு தண்ணீர் 

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் வைத்துவிட்டு காலையில் குடித்து வந்தால், உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைப்பதாகத் தெரிய வருகிறது. இதில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துகள் முடி வளர்ச்சிக்கு பெரிதும்  உதவுகிறது.
 

2018 TopTamilNews. All rights reserved.