• July
    21
    Sunday

Main Area

Main



சிஎஸ்கே வெற்றி: சூப்பர் டீலக்ஸ் பட வசனத்துடன் கொண்டாடிய ஹர்பஜன் சிங்!

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்
Loading...

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியானதை 'சூப்பர் டீலக்ஸ்' பட வசனத்துடன் கொண்டாடியுள்ளார் ஹர்பஜன் சிங்.

இந்த வருடத்துக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 31 (நேற்று)நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

அதில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி சென்னையைப் பேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. அதில்  கேப்டன் தோனி 46 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். அதன் காரணமாக சென்னை அணி 20 ஓவர்களில் 175 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 167 ரன்கள் மட்டுமே எடுக்க, சிஎஸ்கே அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றது. 

இந்நிலையில் ஹர்பஜன் சிங் ஒவ்வொரு முறையும், போட்டி முடிந்த பிறகு தமிழில் எதாவது ஒரு ட்வீட் பதிவு செய்வார். அந்தவகையில் இம்முறை ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது, 'ஒரு நாள் ஒரு டீம, ஏழு டீம் துரத்த அந்த டீம் பல தடய தாண்டி, தோனி புடிச்சு தொங்க, அந்த தல மேட்சுல அடி வெளுக்க, என்னடா எழவு வாழ்க்கனு மேல பாத்தா ஐபிஎல் கப்பு, கீழ சிஎஸ்கே டீம், ஏழு டீமும் கப்பாவது மேச்சாவதுன்னு, கும்புடு போட்டு ஆஹானு சொன்னா. அது சென்னை ஐபிஎல். சூப்பர் டீலக்ஸ் நன்றி சேது ஜி' என்று பதிவு செய்துள்ளார். 

இதையும் படிங்க: ராஜஸ்தான் அணியை வீழ்த்திய சென்னை: ஹாட்ரிக் வெற்றியால் ரசிகர்கள் உற்சாகம்! 

2018 TopTamilNews. All rights reserved.