• April
    25
    Thursday

Main Area

Main



தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

weather update
weather update
Loading...

சென்னை: வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது, தற்போது அதே பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியாக மையம் கொண்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கும்,  ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அதன் காரணமாக மீனவர்கள் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்ககடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 

2018 TopTamilNews. All rights reserved.