சென்னையின் பல இடங்களில்… வெளுத்து வாங்கும் கனமழை!

 

சென்னையின் பல இடங்களில்… வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பின்படி சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வரும் ஆகஸ்ட் 29, 30ம் தேதிகளில் தமிழகத்தில் அதிக மழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த தினங்களில் நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையின் பல இடங்களில்… வெளுத்து வாங்கும் கனமழை!

இன்று காலை வெளியிட்ட அறிவிப்பில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி. திண்டுக்கல், சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் என்றும் திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் தெரிவித்திருந்தது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது.

அதன் படி சென்னையின் முக்கிய பகுதிகளான அயனாவரம், சைதாப்பேட்டை, அண்ணா நகர், பெரம்பூர், கொரட்டூர், அம்பத்தூர் கோட்டூர்புரம், தியாகராய நகர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதே போல சென்னையின் சுற்று வட்டாரப் பகுதிகளான புழல், செங்குன்றம், சோழவரம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்குகிறது.