• October
    17
    Thursday

Main Area

Main



அறுவடை செய்து விவசாயி போல் பிரசாரத்தைதொடங்கிய கனவுக்கன்னி நடிகை!

ஹேமமாலினி
ஹேமமாலினி

சென்னை: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக பாஜக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள நடிகை ஹேமமாலினி விவசாய நிலத்தில் பயிர்களை அறுவடை செய்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் சூடு பிடித்துள்ளது. இதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்து அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், தமிழகத்தில் பிறந்து, மும்பைக்கு இடம் பெயர்ந்து இந்தித் திரைப்பட உலகில் இருபது வருடத்திற்கு மேல் 'கனவுக்கன்னியாக' ரசிகர்களை கவர்ந்த ஹேமமாலினிக்கு, அவர் ஏற்கனவே போட்டியிட்டு எம்.பி.,-யாக தேர்வான அதே மதுரா தொகுதியை பாஜக தலைமை வழங்கியுள்ளது.

hema malini

இதற்காக தனது வேட்புமனுவை கடந்த மாதம் 25-ம் தேதி ஹேமமாலினி தாக்கல் செய்தார். தனது வேட்பு மனுவில் சொத்து மதிப்பு மொத்தம் ரூ.101 கோடி என அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற தேர்தலின்போது அவர் தனது சொத்து மதிப்பு சுமார் ரூ.66 கோடி என தெரிவித்து இருந்தார். அதன்படி, 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.34.46 கோடி அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மதுரா தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய ஹேமமாலினி, தொகுதியில் உள்ள வயல்வெளி பகுதிக்கு சென்று அங்கிருந்த விவசாயிகளிடம் கதிர் அறுக்கும் அரிவாளை வாங்கி கோதுமை பயிர்களை அறுவடை செய்து விவசாயியை போல செயல்பட்டு வாக்கு சேகரித்தார்.

hema malini

பின்னர் அந்த பகுதி விவசாயிகளிடம் பேசிய அவர், தான் மதுரா தொகுதிக்கு நிறைய நலத்திட்டங்கள் செய்துள்ளதால் மக்கள் தன்னை மகிழ்ச்சியுடன் வரவேற்றதாகவும், எதிர்காலத்தில் தொகுதிக்கு இன்னும் பல நலத்திட்டங்கள் செய்வதே தனது நோக்கம் எனவும் தெரிவித்தார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், எனது மக்களவை பிரசாரம் இன்று துவங்கியது. கோவர்த்தன் க்ஷேத்திரத்துடன் அங்கு வயல்களில் பணிபுரியும் பெண்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என பதிவிட்டு சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதையும் வாசிங்க

சூப்பர் டீலக்ஸ் பட சர்ச்சை: விஜய்சேதுபதியை உடனே கைது செய்ய வேண்டும்! 

2018 TopTamilNews. All rights reserved.