• October
    17
    Thursday

Main Area

Main



சின்ன தம்பி யானையை துன்புறுத்தாமல் பிடிக்க உயர்நீதிமன்றம் அனுமதி

chinna thambi
chinna thambi

சென்னை: சின்ன தம்பி யானையை பிடிக்க தமிழக வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

முரளிதரன், அருண் பிரசன்னா ஆகியோர் சின்ன தம்பி யானையை கும்கியாக மாற்றக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சின்ன தம்பி யானையை பிடிக்க தமிழக வனத்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது. 

யானைக்கு காயம் ஏற்படாமல் பிடிக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். சின்ன தம்பியை வனத்துக்கு அனுப்புவதா, முகாமில் பராமரிப்பதா என்பது பிறகு முடிவு செய்யப்படும். உத்தரவு நகலுக்காக காத்திருக்காமல், உடனே சின்ன தம்பி யானையை பிடித்து முகாமிற்கு கொண்டு செல்லலாம். விவசாயிகள் பாதிப்பை தடுப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.