• July
    18
    Thursday

Main Area

Main



லாரன்ஸுக்குப் பதில் இந்தி காஞ்சனாவை இயக்கும் டைரக்டர் இவர்தான்...

லட்சுமி பாம்
லட்சுமி பாம்
Loading...

காஞ்சனா இந்தி ரீமேக்கிலிருந்து கோபித்துக்கொண்டு வெளியேறிய இயக்குநரும் நடிகருமான லாரன்ஸ் அப்படத்தை வேறொரு இயக்குநர் இயக்க கதை தர சம்மதிக்காததைத் தொடர்ந்து இந்தித் தயாரிப்பாளர்கள் இறங்கி வந்திருக்கிறார்கள்.

’காஞ்சனா’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘லட்சுமி பாம்’ துவங்கி ஒரு வாரம் மட்டுமே படப்பிடிப்பு நடந்திருந்த நிலையில் ’மனிதர்களுக்கு மற்ற எல்லாவற்றையும் விட தன் மானம் தான் முக்கியம்’ என்று அறிவித்தபடி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு நீண்ட பதிவு ஒன்றைப்போட்டுவிட்டு படத்தைவிட்டு வெளியேறினார் லாரன்ஸ்.

அக்‌ஷய் குமார், அத்வானி கியாரா, அமிதாப் நடிக்க லாரன்ஸ் இயக்கத்தில் துவங்கப்பட்ட காஞ்சனாவின் ரீமேக் ‘லக்‌ஷ்மி பாம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அதை வெளியிடும் தகவலை இயக்குநர் லாரன்ஸுக்கு ஹீரோ அக்‌ஷய் குமாரும் தயாரிப்பாளர் தரப்பும் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. அதை ஒரு இயக்குநருக்கு நடந்த ஆகப் பெரிய அவமானமாகக் கருதிய லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,...’நண்பர்களே மதியாதார் வாசல் மிதியாதே’ என்பது தமிழனின் பழமொழி. ‘லக்‌ஷ்மி பாம்’ படப்பிடிப்பில் எனக்கு அது நடந்துவிட்டது.எனவே தன்மானமே முக்கியம் என்று கருதி இப்படத்தை விட்டு வெளியேறுகிறேன்.

lakshmi bomb

நான் நினைத்தால் கதையை கொடுக்க முடியாது என கூறலாம், ஆனால் அப்படி செய்யப்போவதில்லை. அக்க்ஷய் மீது எனக்கு பெரிய மரியாதை உள்ளது. அவரை சந்தித்து ஸ்கிரிப்டை ஒப்படைத்துவிட்டு முறையாக விலகுகிறேன். அவர்கள் வேறொரு இயக்குநரை ஒப்பந்தம் செய்துகொண்டு இப்படத்தைத் தொடரலாம். படம் பெரும் வெற்றி பெற குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்று பொங்கி படத்தை விட்டு வாக் அவுட் செய்திருந்தார். அந்நிலையில் இந்தித்தயாரிப்பாளர்கள் வேறொரு இயக்குநரை சீரியஸாகவே தேட முயல ஷாக் ஆகிப்போன லாரன்ஸ் மீண்டும் தூது அனுப்பியுள்ளார். அதை ஒட்டி தயாரிப்பாளர் சற்று இறங்கிவந்துள்ளனர்.

சுமார் ஒருவாரகால பஞ்சாயத்துக்குப்பின் இன்று தனது முகநூல் பக்கத்தில் ஒரு குறிப்பு வெளியிட்டுள்ள லாரன்ஸ்,’’எனது காஞ்சனா ரிமேக் கைநழுவிப் போனது பயங்கர அப்செட்டில் இருந்தேன். இந்நிலையில் நாளை மும்பையிலிருந்து என்னைச் சந்திக்க தயாரிப்பாளர்கள் சென்னை வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் நடக்கும் பேச்சு வார்த்தை சுமுகமாக இருக்கும். அப்படி இருந்தால் நானே படத்தை இயக்குவேன்’ என்று தெரிவித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.