• July
    16
    Tuesday

Main Area

மாதவன், ஹர்பஜன் சிங் பாராட்டிய ஜோதிடர் பாலாஜி ஹாசன்..!

உலக கோப்பை 2019 கணிப்பு ; ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ஜோதிடர் பாலாஜி ஹாசன்..!

நடந்து முடந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற்ற செய்திக்கு நிகராக பேசப்பட்டு வரும் இன்னொரு செய்தி சேலம் ஜோதிடர் பாலாஜி ஹாசனின் உலகக்கோப்பை குறித்த கணிப்பு. 

balaji

அகில இந்திய அளவில் நடைபெறும் ஜோதிடர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பல பரிசுகளையும் பட்டங்களையும்  பெற்றுள்ள இவர் இந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இந்தியா மோதும்.. அதேசமயம் தோற்க நேரிடும் என்றும் கடந்த ஜனவரி -1ஆம் தேதியே தனது கணிப்பை வெளியிட்டிருந்தார்.. 

மேலும்  இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் தான் செமி பைனலுக்கு தகுதி பெறும் என்றும், இந்த 2019 ஆண்டு உலகக்கோப்பையை இதுவரை உலகக்கோப்பையை ஜெயிக்காத புதிய அணியே வெல்லும் எனவும் சொல்லி இருந்தார் .

இந்த தொடரில் மேன் ஆப் தி சீரிஸ்  நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தான் என அவர் ஆணித்தரமாக சொன்னதும் பலித்துள்ளது. அதனால் சமீபத்திய ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளார் பாலாஜி ஹாசன்.

அதேபோல இறுதிப்போட்டியில் நியூசிலாந்து கோப்பையை கைப்பற்றும் என்றும் கூறியிருந்தார்.. கிட்டத்தட்ட இவரது கணிப்புக்கு மிக நெருக்கத்தில் வந்த வெற்றி கடைசி நேரத்தில் தான் நூலிழையில் கைமாறி போயிருக்கிறது. 

balaji

அதுமட்டுமல்ல கடந்த ஒரு வருட காலமாக பல விஷயங்களில் இவர் கூறிய கணிப்புகள் ஆச்சர்யப்பட வைக்கின்றன.. பெரும்பாலான கணிப்புகள் அப்படியே பலித்துள்ளன., ஆர்யாவுக்கு இந்த வருடம் திருமணம் ஆகும் என சொன்னது, விஷால் வரலட்சுமியை திருமணம் செய்ய மாட்டார் என சொன்னது, ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் இணைவார்கள் என சொன்னது, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை தோற்கடித்து ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் ஆவார் என சொன்னது, மோடிதான் மீண்டும் பிரதமர் ஆவார் என சொன்னது என அனைத்துமே நூறு சதவீதம் அப்படியே பலித்துள்ளதால் யாருய்யா இந்த பாலாஜி ஹாசன் என உலகமே கிறுகிறுத்து போய் கிடக்கிறது.

இவரது துல்லியமான கணிப்புகளை கண்டு நடிகர் மாதவன், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்,  நடிகை ஷில்பா ஷெட்டி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அவர்களும் கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் மோகன்,  பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் உள்ளிட்ட பலர் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் ஜோதிடர் பாலாஜி ஹாசன்.

balaji

2019 எப்படி? ஜோதிட வல்லுநர்களின் பார்வையில்... (At 53.21 seconds about cricket predictions)

https://www.youtube.com/watch?v=VIgRkKuDlfY  

உள்ளூர் சினிமா முதல் உலக கோப்பை வரை..வைரல் ஜோதிடர் Balaji Hassan அதிரடி கணிப்பில்...

https://www.youtube.com/watch?v=bIsChDH9VOE

ttnnewsdesk Mon, 07/15/2019 - 19:15
balaji hasan astrologer worldcup 2019 ஜோதிடர் பாலாஜி ஹாசன் ஜோதிடம் தமிழகம்

English Title

madhavan and harbhajan singh appreciated astrologer balaji hasan..!

News Order

0

Ticker

0 தொழிலில் வெற்றி இந்த ராசிக்கு தான் கிடைக்கும்

திங்கள்கிழமை (15-07-19)
ராகுகாலம் காலை 7.30 மணி முதல் 9 வரை
எமகண்டம் காலை 10.30 மணி  முதல் 12 வரை
நல்லநேரம்
காலை 6.15 மணி முதல் 7.15 வரை
மாலை 4.45 மணி  முதல் 5.45 வரை
சந்திராஷ்டமம்
கிருத்திகை இரவு 8.28 வரை பிறகு ரோகிணி
பரிகாரம் தயிர்

மேஷம் 
பொறுமை தான் ரொம்பவும் முக்கியம் என்கிறது உங்களுக்கான இன்றைய ராசிபலன். உங்கள் பணியில் மற்றவர்கள் மூக்கை நுழைக்க அனுமதிக்க வேண்டாம். தடைப்பட்டு நிற்பீர்கள். உங்களுக்கான நேரம் வரும் வரை காத்திருங்கள். உங்கள் வெற்றி உங்களை விட்டு எங்கும் சென்றுவிடாது.

ரிஷபம் 
யார் என்ன சொன்னாலும், அந்த கருத்தைக் கேட்டு உங்களது மனசாட்சியின் படி முடிவெடுங்கள். அவர்கள் சொல்லும் ஆலோசனைகளை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒருவரின் வாழ்க்கையை இன்னொருவரால் வாழ முடியாது. இன்று உங்கள் முடிவுகள் தவறானாலும், வேறொரு சரியான நாளுக்காக காத்திருங்கள். பணியிடத்தில் சில சங்கடமான சூழல்கள் நிலவினாலும், விரைவில் சரியாகும். 

மிதுனம்
மனரீதியாக இன்று யாராவது உங்களை காயப்படுத்தக் கூடும். ஆனாலும், உங்கள் இலக்குகளை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பீர்கள். உங்கள் நண்பர்களின் வார்த்தை உங்களுக்கு ஆதரவாக இருக்கும். கவலை வேண்டாம்.

கடகம் 
வெற்றி நீங்கள் நெருங்கும் தூரத்தில் தான் இருக்கிறது. உங்களை சுயபரிசோதனை செய்துக் கொள்ள இன்று ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். வெளிநாடுகளில் இருக்கும் உங்கள் நண்பர்களிடம் கூட தொலைபேசியில் பேசி உங்களது பழைய உறவுகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளுங்கள். வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசும் நேரம் வந்து விட்டது. இனி  புகழ் வெளிச்சம் உங்கள் மேல் படரும்.

சிம்மம்
செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டிய நேரம். நிதி நிலைமையில் சிக்கல்கள் இருக்கும். ஆனாலும், அதைப் பொருட்படுத்தாமல் ஊதாரித்தனமாக செலவுகளை செய்வீர்கள். அது உங்களை மட்டும் பாதிக்காது. உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் வேதனைக்கு உள்ளாக்கும் என்பதை மறக்க வேண்டாம். அதற்கு இடம் கொடுக்காமல், உங்களுக்கான தனி வழியில் எப்போதும் போல இயங்குவீர்கள். பெற்றோரிடம் அன்பு கொள்ளுங்கள்.

கன்னி 
யாருடைய பேச்சையும் கேட்க மாட்டீர்கள். அதனால் சில பிரச்சனைகள் உருவாகலாம். நீங்கள் இந்த தருணத்தில் என்ன நினைக்கிறீர்கள் என்பதை யாராலும் யூகிக்க முடியாது. உங்களது செயல்பாடு என்னவாக இருக்கப் போகிறது, உங்களது திட்டம் என்ன என்பதை கூட யாராலும் கிரகிக்க முடியாது. உங்களை நீங்களே புரிந்து கொண்டால் தான் உண்டு.

துலாம் 
இன்றைய தினம் உங்களுக்கு முழுக்க முழுக்க நேர்மறை எண்ணங்களை மட்டுமே வழங்கப் போகிறது. உங்களுக்கு என்று எவ்வளவு போதனைகள் செய்தாலும், உங்கள் வழியில் நிற்காமல் சென்றுக் கொண்டே இருப்பீர்கள். குழந்தைகளால் நல்ல பெயர் கிடைக்கும். சொந்த தொழில் துவங்குவதற்கான நேரம் இதுவல்ல. ஒரு மாதம் தள்ளிப் போடுங்கள்.

விருச்சிகம்
உங்களுக்கு தொழில் செய்வதற்கான கிரகங்கள் சாதகமாக இருக்கின்றன. செய்யும் தொழிலில் வெற்றி தேவதை நிச்சயமாக உங்களை ஆசிர்வதிப்பாள். விடாமுயற்சியால் நிச்சயம் வெற்றியை நெருங்கி விடுவீர்கள். சில சமயங்களில் உங்களது இரண்டாம் கட்ட திட்டங்கள் வெற்றிப் பெறும். அவை உங்களுக்கு ஆச்சர்யத்தை கொடுக்கும். மற்றவர்களுக்கு உங்களைப் பற்றி நன்கு தெரியும் என்பதால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். உங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருப்பீர்கள்.

தனுசு 
உங்களுக்கான வளமான கட்டமைப்பை உருவாக்கும் எண்ணம் உங்களிடம் அதிகரிக்கும். இதுவரை மனதில் நினைத்த காரியங்கள் எல்லாம் தடைப்பட்டுக் கொண்டே போனதே என்று கவலைப்படாதீர்கள். இந்த ஆடி உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் அழைத்து வருகிறது.

மகரம் 
சுயநலமான போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். இந்த உலகம் நமக்காக மட்டுமே இயங்கவில்லை. உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை முதலில் உணர்ந்து கொண்டு அதற்கேற்ப வினையாற்றுங்கள். உங்களது தனிப்பட்ட சிந்தனைகளை உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்வதே இப்போது உங்களுக்கு சிறந்தது. நீங்கள் எதிர்பார்த்ததை விட ஒரு விஷயம் சிறப்பாக செயல்படாத போது அங்கேயே நீங்கள் தடைப்பட்டு நிற்க வேண்டாம்.

கும்பம் 
புதிய மாற்றங்களுக்காக அதிரடியான நடவடிக்கைகளை எடுப்பீர்கள். கூடிய விரைவில் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்வீர்கள். உங்களுக்கு நெருக்கமானவர்களிடமும் கேட்டும் கூட வாழ்க்கையின் அர்த்தத்தை உணர வாய்ப்பு கிடைக்காத உங்களுக்கு, இந்த தருணங்கள் படிப்பினை கொடுக்கும்.

மீனம் 
மறந்தும் கூட ஒரு தவறான அடியை எடுத்து வைக்க மாட்டீர்கள். அவ்வளவு துல்லியமாகவும், நேர்மையாகவும் உங்களை பணியை செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு எது சரியென படுகிறதோ, அதைச் செய்வதில் முனைப்பு காட்டுவீர்கள். அது உங்களுக்கு வெற்றியை கொடுக்கும் என்பது கூடுதல் பிளஸ்.

manikkodimohan Mon, 07/15/2019 - 09:33
astrology horoscope today's rasipalan ராசிபலன் ஜோதிடம்

English Title

Today Astrology In Tamil

News Order

0

Ticker

0 இன்று இந்த ராசிகாரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டு

13 - 7 - 19 (சனிக்கிழமை)

நல்ல நேரம்    : காலை 7.30மணி முதல் 08.30 வரை
:மாலை 4.30மணி முதல் 05.30 வரை
ராகு காலம்    :காலை 9.00மணி முதல் 10.30வரை
எமகண்டம்    :பிற்பகல் 1.30மணி முதல் 03.00 வரை
சந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம் 
பரிகாரம்        : தயிர்.

 

மேஷம் 
பயணங்களை மேற்கொள்ளும் பொழுது கவனம் அவசியம். பணவரவு லாபகரமானதாக அமையும். உடல் நலனில் அக்கறை அவசியம் . மந்தமான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : கவனம் தேவை
பரணி : உடல் நலனில் அக்கறை
கிருத்திகை : பணவரவு


ரிஷபம் 
செலவுகள் அதிகமாகும். உறவினர்களின் வருகை உண்டு. வீட்டில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் 

கிருத்திகை : செலவுகள் அதிகம்
ரோகிணி : வீட்டில் மகிழ்ச்சி
மிருகசீரிடம் : தொழிலில் கவனம்


மிதுனம் 
அலுவலகத்தில் எதிர்பாராத திருப்பம் அமையும். பணவரவு உண்டு. மன அழுத்தத்தை தவிர்க்கவும். குழந்தைகளால் குதூகலமான நாள். திடீர் அதிர்ஷ்டம் உண்டு.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிடம் : குழந்தைகளால் மகிழ்ச்சி
திருவாதிரை : பணவரவு
புனர்பூசம் : திடீர் திருப்பம்


கடகம் 
இன்று இனிமையான நாளாக அமையும். முதலீடுகள்  தவிர்க்கப் படவேண்டிய நாள். தொழிலில் கவனம் தேவை. நண்பர்களால் மகிழ்ச்சி கிட்டும். ஆசை வார்த்தைகள் சொல்லி பேசும் நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : தொழிலில் கவனம்
பூசம் : இனிமையான நாள்
ஆயில்யம் : நண்பர்களால் மகிழ்ச்சி


சிம்மம் 
உடல் நிலையில் முன்னேற்றமான நாள். திடீர்  திருப்பம் உண்டு. வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பணவரவு உண்டு. பொறுமை அவசியம். குடும்பத்தாரிடம் வார்த்தைகளை யோசித்து பேசுங்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு 

மகம் : பொறுமை அவசியம்
பூரம் : உடல் நலனில் முன்னேற்றம்
உத்திரம் : திடீர் திருப்பம்.


கன்னி 
ஆரோக்கியமான நாளாக அமையும். வேலை பளு அதிகம். தனலாபம் உண்டு. முதலீடுகளில் கவனம் அவசியம்.எதிர்பாராத திருப்பம் உண்டு.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திரம் : தனலாபம் .
அஸ்தம் :  ஆரோக்கியமான நாள்.
சித்திரை : வேலைப் பளு அதிகம்.


துலாம் 
உடல் நலனில் அக்கறை அவசியம்.. நிதி உதவி கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். நீண்ட பயணம் உண்டு.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : கடன்கள் வசூலாகும்
சுவாதி : இனிமையான நாள்.
விசாகம் : பொழுதுபோக்கு


விருச்சிகம் 
சுறுசுறுப்பான நாளாக அமையும் . உடமைகளில் கவனம் அவசியம். நிதி சுமை சற்றே கூடும். வீட்டில் சுமுகமான நாளாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : சுறுசுறுப்பு
அனுஷம் : கவனம்.
கேட்டை :சுமூகம்

தனுசு 
கடன்கள் வசூலாகும். மகிழ்ச்சியான பொழுதுபோக்கு இன்று அமையும்.திட்டங்கள் முடிவுக்கு வரும். இனிமையான நாள். உங்கள் எதிர்கால திட்டங்கள் பலிதமாகும். சிலருக்கு முன்னோர்களின் சொத்துக்கள் கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மூலம் : இன்பமான நாள்.
பூராடம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
உத்திராடம் : மேன்மை உண்டாகும்.


மகரம் 
எதிர்பாராத திடீர் லாபம் கிடைக்கும். ஓய்வான நாள். ஆனந்தத்தை அள்ளித்தரும் நாள். தேவைப் படுவோருக்கு உதவி செய்வீர்கள். 
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : ஓய்வு
திருவோணம் : உதவி
அவிட்டம் : ஆனந்தம்


கும்பம் 
உற்சாகமான நாளாக அமையும். வாழ்க்கைமுறையை மாற்றிக் கொள்ள சரியான நாள். பாராட்டு மழையில் நனைவீர்கள். தொழிலில் முன்னேற்றம் உண்டு. தனலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : பாராட்டுமழை
சதயம் :தனலாபம்
பூரட்டாதி : உற்சாகம்

மீனம் 
புன்னகை மாறாத நாளாக அமையும். உங்கள் திறமைகள் பளிச்சிடும் நாள்.புதிய முயற்சிகள் தேடி வரும். தொழிலில் லாபகரமான நாள்
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : பொருட்சேர்க்கை 
உத்திரட்டாதி : ஆதாயமான நாள்.
ரேவதி : திறமைகள் வெளிப்படும்.

manikkodimohan Sat, 07/13/2019 - 08:55
astrology rasipalan horoscope ராசிபலன் ஜோதிடம்

English Title

today astrology in tamil

News Order

0

Ticker

0 இந்த ராசிக்காரங்க இன்னைக்கு ஜாமீன் கையெழுத்து போடாதீங்க!

இன்று வெள்ளிக்கிழமை 12-7-2019


நல்ல நேரம்    : காலை 9:15 மணி முதல் 10.15 வரை:

மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம்    :காலை 10.30 மணி முதல் 12.00 வரை
எமகண்டம்        :பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 வரை 
சந்திராஷ்டமம் : அசுவினி, பரணி
பரிகாரம்        : வெல்லம்


மேஷம் 
இன்று பிடிவாதங்களை தவிர்த்தல் நலம். ஒப்பந்தங்களால் பணவரவு உண்டு. உடமைகளில் கவனம் அவசியம். விலையுயர்ந்த பொருட்களை கையாள்வதைத் தவிர்த்து விடுங்கள். யாருக்கும் முன் ஜாமீன் கையெழுத்து போட வேண்டும். சிக்கல்களில் கொண்டு வந்து நிறுத்தும்.
அதிர்ஷ்ட திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அசுவினி : கவனம் அவசியம்
பரணி : பிடிவாதம்
கிருத்திகை : பணவரவு


ரிஷபம் 
வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.  பெற்றோர்களால் ஆதாயம் அமையும் நாள். புன்னகையுடன் இந்த நாளில் வலம் வரலாம். முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். வெற்றி உங்களுக்கே.
அதிர்ஷ்ட திசை : தென் கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கிருத்திகை :ஆதாயம் 
ரோகிணி : வெற்றி
மிருகசீரிடம் : புன்னகை


மிதுனம் 
புதிய வாய்ப்புகளை உருவாகும். திடீர் பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஆனந்தமும் , அமைதியும் நிலவும். பாராட்டப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை :வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிடம் : பாராட்டு
திருவாதிரை : பணவரவு
புனர்பூசம் : ஆனந்தம்


கடகம் 
நம்பிக்கையான நாளாக அமையும்.பதவி உயர்வு அல்லது பண வரவு உண்டு. ஆசிர்வதிக்கப்பட்ட நாள்.அன்பில் திழைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
புனர்பூசம் : நம்பிக்கை 
பூசம் : அன்பு
ஆயில்யம் : உயர்வு


சிம்மம் 
உடல் நலனில் அக்கறையுடன் செயல் படுங்கள்.  வங்கி டீலிங்கில் கவனம் அவசியம்.நிதானம் தேவை.
அதிர்ஷ்ட திசை : தென் மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் :அக்கறை
பூரம் : கவனம்
உத்திரம்: நிதானம்


கன்னி 
தேர்வுகள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் உண்டு. பயணத்தால் திருப்பம் உண்டு.பொன்னான நாளாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
உத்திரம் : சிறப்பு
அஸ்தம் :திருப்பம்
சித்திரை : முன்னேற்றம்


துலாம் 
ஆரோக்கியமான உற்சாகமான நாளாக இன்று அமையும். முக்கியமானவர்களுடன் நட்பு பலப்படும். உடைமைகளில் சிறிது கவனம் தேவை. முதலீட்டில் லாபம் உண்டு.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் :ஊதா
சித்திரை : விரயம்
சுவாதி :கனிவு
விசாகம் : கவனக்குறைவு


 விருச்சிகம் 
இன்று வேலையில் சாதகமான நாளாக அமையும். சிரிப்பு நிறைந்த நாள். சிறிது மருத்துவ கவனம் தேவைப்படும். நீண்ட கால லாபங்களில் முதலீடு செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விசாகம் : முதலீடு
அனுஷம் : சிரிப்பு
கேட்டை : கவனம்


தனுசு 
கவனக்குறைவால் பிரச்சனைகள் ஏற்படும். நேர விரயம் ஏற்படும். கனிவான பேச்சினால் அதிகமானதை பெறும் வாய்ப்பு உண்டு. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை :தென் கிழக்கு
அதிர்ஷ்ட எண் :9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் ஊதா
மூலம் : சங்கடம்
பூராடம் : பிரச்சனை
உத்திராடம் : எச்சரிக்கைத் தேவை


மகரம் 
தொழிலில் கணிசமான லாபம்கிடைக்கும். கூட்டு முயற்சி பலன் அளிக்காது. சுபச்செலவுகள் உண்டு. பேச்சில் நிதானம் தேவை.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
உத்திராடம் : முயற்சி
திருவோணம் : நிதானம்
அவிட்டம் : சுபச்செலவு


கும்பம் 
எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். ஆரோக்கியத்தில் கவனம் . தற்காலிக கவலை தரும் நாளாக அமையும். குழந்தைகளால் அலைச்சல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் :  கவலை
சதயம் : கவனம்
பூரட்டாதி : அலைச்சல்


மீனம் 
பணவரவு மேம்படும். ஆன்மீக பயணம் உண்டு.வேலைப்பளுவின் காரணமாக உடல் சோர்வு உண்டு. ஆச்சர்யங்கள் நடக்கலாம்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : பயணம்
உத்திரட்டாதி : மகிழ்ச்சி
ரேவதி:ஆச்சர்யம்

manikkodimohan Fri, 07/12/2019 - 08:18
rasipalan astrology  ராசிபலன் ஜோதிடம்

English Title

today astrology in tamil

News Order

0

Ticker

0 பணநிலைமை யாருக்கெல்லாம் சரியாகும்?

இன்றைய ராசிபலன்  11-07-2019 (வியாழன்)


மேஷம் 
மனைவியின் விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள், அவரின் கோபத்துக்கு ஆளாவீர்கள். தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனே புறக்கணியுங்கள்.  வேலையில் பிரச்சினைகளைத் தீர்க்க புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 1

ரிஷபம் 
இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம். ஆனால் ஊதாரித்தனமாக செலவு செய்துவிடாதீர்கள். நண்பர்களும் உறவினர்களும் அதிக கவனத்தை எதிர்பார்ப்பார்கள். உங்களுக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும் என்பதால் பலன் தரக் கூடிய நாள். 
அதிர்ஷ்ட எண்: 1
மிதுனம் 
இன்று செலவுகள் அதிகரிக்கும். உங்களின் பிடிவாதமான குணத்தால் பெற்றோரின் அமைதி கெடும். எல்லோரையும் வருத்தம் அடையச் செய்யாதிருக்க பணிவாக இருப்பது நல்லது. 
அதிர்ஷ்ட எண்: 8

கடகம் 
மனம்தான் வாழ்வின் நுழைவாயில். ஏனெனில் நல்லது, கெட்டது எதுவும் மனதின் மூலமே வருகிறது. உங்களின் பிடிவாதமான குணத்தால் வீட்டில் உள்ளவர்களும் நெருங்கிய நண்பர்களும் வருத்தப்படுவார்கள்.  
அதிர்ஷ்ட எண்: 2

சிம்மம் 
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குழப்பமாகும். மனதில் செலவுகள் தான் ஆக்கிரமித்திருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 1

கன்னி 
அச்சம், வெறுப்பு, பொறாமை, பழிவாங்குதல் போன்ற நெகடிவ் உணர்ச்சிகளை விட்டொழிக்கத் தயாராகுங்கள். போட்டி வரும்போது வேலைக்கான அட்டவணை கடுமையாக இருக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்.  மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டிய நாள். 
அதிர்ஷ்ட எண்: 8

துலாம் 
உறவினர்கள் ஆதரவளித்து உங்கள் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் பாரத்தை தூக்கிவிடுவார்கள். இலையுதிர்காலத்தில் மரத்தில் இருந்து விழும் இலையைப் போன்றது உங்களின் காதல் வாழ்க்கை. 
அதிர்ஷ்ட எண்: 1

விருச்சிகம் 
பழங்கால பொருட்கள் மற்றும் நகைகளில் செய்யும் முதலீடு லாபத்தையும் வளத்தையும் கொண்டு வரும். வேலையில் இந்த நாள் உங்கள் நாளாகும். நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு, மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். 
அதிர்ஷ்ட எண்: 3

தனுசு 
வேலையிடத்தில் சீனியர்களின் அழுத்தமும் வீட்டில் அதிருப்தியும் சிறிது அழுத்தம் ஏற்படுத்தும். பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல நாள். ஏனென்றால் எதிர்பாராத திடீர் லாபம் கிடைக்கும். 
அதிர்ஷ்ட எண்: 9

மகரம் 
உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். எந்த பிசினஸ், சட்ட ஆவணங்களையும் நன்றாக படித்துப் பார்க்காமல் கையெழுத்திடாதீர்கள். 'வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. 
அதிர்ஷ்ட எண்: 9

கும்பம் 
கடந்த காலத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தால், உங்கள் வெறுப்புணர்ச்சி ஆரோக்கியத்தைக் கெடுக்கும். முடிந்த வரையில் ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல. எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள். 
அதிர்ஷ்ட எண்: 7

மீனம் 
இன்று உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும், முன்னேற்றம் நிச்சயம். இன்று உங்கள் சம்பாதிக்கும் சக்தியை உயர்த்தக் கூடிய அறிவும்,  உடல் திறனும் உங்களுக்கு இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 5

manikkodimohan Thu, 07/11/2019 - 08:34
astrology today rasipalan பணநிலைமை ஜோதிடம்

English Title

today astrology in tamil

News Order

0

Ticker

0 இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் உற்சாகம் தான் | என்ஜாய் பண்ணுங்க!

இன்றைய ராசிபலன் 10-07-2019 (புதன்கிழமை) 
நல்ல நேரம் 
காலை 9.15 மணி முதல் 10.15 வரையில்
மாலை 4.45 முதல் 5.45 வரையில்
ராகு காலம் :  காலை 12.00 மணி முதல் 1.30 வரையில்
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 வரையில்
சந்திராஷ்டமம் : மீனம்
பரிகாரம் : பால்


மேஷம் 
கூட்டு முயற்சிகளிலும் சந்தேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். குடும்பத்தினரின் நகைச்சுவையான இயல்பு, சூழ்நிலையை கலகலப்பாக்கும். இன்று உங்களுக்கு மிக சாதகமான நாள், எனவே அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள். இந்த நாளை சிறப்பானதாக்க, மறைந்திருக்கும் தகுதிகளை பயன்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 6

ரிஷபம்
அதிக உற்சாகமாக இருந்தாலும், இன்று உங்களுடன் இருக்க முடியாமல் போனவருக்காக வருந்துவீர்கள். நிலுவையில் உள்ள குடும்ப கடன்கள் அனைத்தையும் உங்களால் தீர்க்க முடியும்.உங்கள் திறமைகளும் கவனிக்கப்படும். இன்று வேலையில் உங்களுக்கு சாதகமான நாள்.
அதிர்ஷ்ட எண்: 5

மிதுனம் 
வாழ்க்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள், வாழ்வில் அக்கறை காட்டுவதே உண்மையான சவால் என உணருங்கள். வாக்குவாதத்தை ஏற்படுத்தக் கூடிய சர்ச்சையான விஷயங்களை தவிர்க்க வேண்டும். நீங்கள் விரும்பும் வகையில் விஷயங்கள் நடக்காத நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்: 3


கடகம் 
ஆரோக்கியத்தைப் பொருத்த வரை மிக நல்ல நாள். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கிறது, முன்னேற்றம் நன்றாகத் தெரிகிறது. இன்று மனதை சோதித்துப் பார்ப்பீர்கள். உங்கள் உழைப்புக்கேற்ற பலன்கள் நிச்சயம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 7

சிம்மம் 
உங்களை சாந்தமாக வைத்திருக்க உதவும் செயல்களில் ஈடுபாடு காட்டுங்கள். முக்கியமானவர்களுடன் கலந்து பேசும் போது கண்களையும் காதுகளையும் திறந்து வையுங்கள். தகவல் தொடர்புகளை கவனமாகக் கையாள வேண்டும். 
அதிர்ஷ்ட எண்: 5


கன்னி 
இன்று பல புதிய நிதி திட்டங்கள் உங்களிடம் வைக்கப்படும். எந்தக் கருத்தும் தெரிவிப்பதற்கு முன்பு, அவற்றின் சாதக பாதங்களை கவனமாக பாருங்கள். பிறருக்கு உதவி செய்வதில் உங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவிடுங்கள், உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் ஈடுபாடு காட்டாதீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 3

துலாம் 
சாப்பிடும்போதும் எச்சரிக்கையாக இருங்கள். அக்கறையின்றி இருந்தால் நோயில் சிக்குவீர்கள். நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். உங்கள் கருத்துக்காக நீங்கள் பாராட்டப் படுவீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 6

விருச்சிகம் 
சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். உடல் நலம் சீராகும். 
அதிர்ஷ்ட எண்: 7

தனுசு
உங்களை விட குறைந்த அனுபவம் உள்ளவர்களிடம் பொறுமையாக இருக்க வேண்டும். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 4

மகரம் 
இன்று உங்கள் கவனமின்மையால் நிச்சயமாக சில இழப்பு ஏற்படும். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால், அது தள்ளிப்போகும். 
அதிர்ஷ்ட எண்: 4

கும்பம் 
 இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். நீங்கள் ஆச்சரியப்படும் வகையில் உங்கள் உதவிக்கு சகோதரர் வருவார். வேலையில் இன்று மிக சாதகமான நாள், எனவே அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 2

மீனம் 
உடல்நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் பிரச்சினைகள் இருக்கலாம். குடும்ப பொறுப்புகளை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் கோபத்துக்கு ஆளாக நேரிடலாம். எல்லாமே காலப்போக்கில் மாறும். ஒரே வீட்டில் வாழ்வது மட்டுமே திருமண பந்தமல்ல. ஒருவருடன் ஒருவர் போதுமான நேரத்தையும் செலவிட வேண்டும்.
அதிர்ஷ்ட எண்: 9

manikkodimohan Wed, 07/10/2019 - 07:52
astrology horoscope today's rasipalan ராசிபலன் ஜோதிடம்

English Title

today astrology in tamil

News Order

1

Ticker

0 கிரகங்கள் எந்த ராசிக்கு எல்லாம் சாதகமாக இருக்கும்?

செவ்வாய் கிழமை (09.07.2019) ராசி பலன்கள் 
நல்ல நேரம் 
காலை 7.45 மணி முதல் 8.45 வரையில்
மாலை 4.45 முதல் 5.45 வரையில்
ராகு காலம் :  மாலை 3 மணி முதல் 4.30 வரையில்
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 வரையில்
சந்திராஷ்டமம் : கும்பம் 
பரிகாரம் : பால்

மேஷம் 
உங்கள் மனதில் பாசிட்டிவ் எண்ணங்களை உருவாக்குங்கள். நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். சிந்தித்துப் பேசுங்கள். உணர்ச்சியைக் கட்டுப்படுத்துங்கள். 
அதிர்ஷ்ட எண்: 1

ரிஷபம் 
வேலையிடத்தில் சீனியர்களின் அழுத்தமும் வீட்டில் அதிருப்தியும் சிறிது அழுத்தம் ஏற்படுத்தும். உங்கள் வீட்டைச் சுற்றி உடனடியாக சில சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 9


மிதுனம் 
புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். உங்கள் முயற்சி மற்றும் கடமை உணர்வை குடும்பத்தினர் பாராட்டுவார்கள். உங்கள் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத நாளிது. சிறப்பான நாள். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 7

கடகம் 
ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். நீங்கள் செய்யாததை மற்றவர்களை செய்யச் சொல்லி வற்புறுத்தாதிருக்க முயற்சியுங்கள். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 2


சிம்மம் 
வெளிப்புற பார்ட்டிகளும் மகிழ்ச்சியான சந்திப்புகளும் இன்றைய நாளை நல்ல மன நிலையில் வைத்திருக்கும். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம். ஆனால் அதிகரிக்கும் செலவு, உங்களை சேமிக்க விடாமல் செய்யும். 
அதிர்ஷ்ட எண்: 9

கன்னி 
உடல் ஆரோக்கியத்தைக் கவனித்து ஒழுங்குபடுத்துங்கள். ரியல் எஸ்டேட் மற்றும் பண பரிவர்த்தனைகளுக்கு நல்ல நாள். சமீப காலமாக தனிப்பட்ட வாழ்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறீர்கள். பிரச்சினையோடு உங்களை நாடி வருபவர்களுக்கு உதவி செய்வீர்கள்.இன்று நீங்களாக முன்வந்து செய்யும் வேலை, நீங்கள் உதவும் நபருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி உங்களையே இன்னும் பாசிடிவாக பார்க்க உதவும். 
அதிர்ஷ்ட எண்: 7
 
துலாம் 
சாப்பாட்டின் சுவையை அறிய உப்பு தேவைப்படுவதைப் போல, மகிழ்ச்சியின் மதிப்பை அறிய மகிழ்ச்சியின்மையும் அவசியம். உங்கள் மனநிலையை மாற்ற சில நிகழ்ச்சிக்குச் செல்லுங்கள். நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். யாராவது உங்களுக்கு அதிர்ச்சி தரலாம், கவனமாக இருக்கவும். 
அதிர்ஷ்ட எண்: 1


விருச்சிகம் 
உங்களை நீங்களே தேவையில்லாமல் கண்டித்துக் கொள்வது உற்சாகத்தைக் குறைக்கும். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும்.
அதிர்ஷ்ட எண்: 3

தனுசு 
நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குழப்பமாகும். மனதில் செலவுகள்தான் ஆக்கிரமித்திருக்கும். பிரச்சினைகளை மனதைவிட்டு தள்ளி வைத்து, வீட்டிலும் நண்பர்கள் மத்தியிலும் உங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். 
அதிர்ஷ்ட எண்: 9

மகரம் 
அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள். எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நஷ்டம் நிச்சயம். 
அதிர்ஷ்ட எண்: 9

கும்பம் 
மனதில் நல்ல சிந்தனை ஓட்டம் இருந்தால் அலுவலகத்தில் உற்சாகமாக இருப்பர்கள். எதிர்காலம் வளமாக இருக்க புதிய தொடர்புகளை நீங்கள் உருவாக்க வேண்டும். தொழில் மேம்பாட்டில் அவர்கள் உதவி செய்வார்கள். 
அதிர்ஷ்ட எண்: 6

மீனம் 
இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். 
அதிர்ஷ்ட எண்: 4

manikkodimohan Tue, 07/09/2019 - 08:45
astrology horoscope rasipalan ராசிபலன் ஜோதிடம்

English Title

today astrology in tamil

News Order

1

Ticker

0 எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டியவர்கள் யார் யார்?

திங்கட்கிழமை (08.07.2019) ராசி பலன்கள் 
நல்ல நேரம் 
காலை 10 மணி முதல் 10.30 வரையில்
மாலை 3 முதல் 4 வரையில்
ராகு காலம் :  காலை 7.30 மணி முதல் 9 வரையில்
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 வரையில்
சந்திராஷ்டமம் : கும்பம்
பரிகாரம் : தயிர்

மேஷம் 
உடல்நலம் சரியாக இருக்கும். ஆடம்பரமான வாழ்க்கை முறையால் வீட்டில் டென்சன் அதிகரிக்கும்.  மன உறுதியால் வெற்றி பெற வேண்டிய நாள்.  எதிலும் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருங்கள்.
அதிர்ஷ்ட எண்: 5


ரிஷபம் 
மாலையில் நண்பர்களுடன் வெளியில் செல்லுங்கள், அது நிறைய நல்லதை செய்யும். இன்று மேற்கொள்ளும் கூட்டு முயற்சிகள் கடைசியில் ஆதாயம் தருபவையாக இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 4


மிதுனம் 
அழுத்தத்தை விரட்டிட குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள். குழந்தைகளின் குணமாக்கும் சக்தியை நீங்கள் அனுபவிப்பீர்கள். ஆசிகளும் நல்ல அதிர்ஷ்டங்களும் வரவுள்ளதால் விருப்பங்கள் பூர்த்தியாகும். முந்தைய நாட்களின் கடின உழைப்புகளுக்குப் பலன்கள் கிடைக்கும். 
அதிர்ஷ்ட எண்: 2


கடகம் 
துறவி ஒருவரை சந்திப்பது உங்களுக்கு ஆறுதலையும் மன அமைதியையும் கொடுக்கும். அலுவலகத்தில் இதுவரை நீங்கள் யாருடன் பேச வேண்டுமென முயற்சி செய்தீர்களோ அவரிடம் பேசும் நல்ல வாய்ப்பு இன்று கிடைக்கும். 
அதிர்ஷ்ட எண்: 6


சிம்மம் 
தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். மாலை நேரத்துக்காக விருந்தினர்கள் உங்கள் வீட்டில் கூடுவார்கள். குழப்பங்களோ, குடும்ப நிகழ்ச்சியோ எதுவாக இருந்தாலும் அதில் நீங்கள் ஆளுமை செலுத்துவீர்கள். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும். 
அதிர்ஷ்ட எண்: 4


கன்னி 
உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். உங்கள் திறமைகள் கவனிக்கப்படும். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். இன்று உங்களிடையே வாக்குவாதம் நடக்க கூடும். 
அதிர்ஷ்ட எண்: 3


துலாம் 
முந்தைய முயற்சிகளின் மூலம் கிடைக்கும் வெற்றி உங்கள் நம்பிக்கையை உயர்த்தும். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். மிகவும் எச்சரிக்கையாவும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 5


விருச்சிகம் 
செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் ஈடுபாடு காட்டாதீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 7


தனுசு 
இன்று நீங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் நீங்கள்தான் மையமானவராக இருப்பீர்கள். இன்று தர்மகாரியமும், சமூகப் பணியும் அழைக்கும். 
அதிர்ஷ்ட எண்: 4


மகரம் 
உங்கள் விருப்பத்தின்படி குழந்தைகள் நடக்க மாட்டார்கள். அது உங்களை ஆத்திரம் அடையச் செய்யலாம். உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். உறவினர்கள் வருகை, நீங்கள் நினைத்ததை விட நல்லதாக இருக்கும். எனவே உங்களைத் தேடி வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள். 
அதிர்ஷ்ட எண்: 4


கும்பம் 
பயம், சந்தேகம், கோபம், பேராசை போன்ற நெகடிவ் சிந்தனைகளை ஒழிக்க வேண்டும். அவை உங்கள் விருப்பங்களின் எதிர் சக்திகளை காந்தம் போல இழுப்பவை. 
அதிர்ஷ்ட எண்: 2


மீனம் 
உங்களிடம் திறமைக்கு குறைவில்லை, நம்பிக்கைதான் குறைவு. எனவே உங்கள் உண்மையான திறமையை அறிந்திடுங்கள்.  இன்று உங்கள் வேலையை எல்லோரும் பாராட்டக்கூடும். இனிமையான அத்தியாயம் இன்று தொடங்கும்.
அதிர்ஷ்ட எண்: 8

manikkodimohan Mon, 07/08/2019 - 07:57
today's rasipalan astrology  ராசிபலன் ஜோதிடம்

English Title

today astrology in tamil

News Order

1

Ticker

0 யாருக்கெல்லாம் திருமண வாய்ப்புகள் கைகூடும்

ஞாயிற்றுக்கிழமை (07.07.2019) ராசி பலன்கள் 
நல்ல நேரம் காலை 07.45 மணி முதல் 08.45 வரையில்
மாலை 03.15 முதல் 04.15 வரையில்

ராகு காலம் :  மாலை 4.30 மணி முதல் 06.00 வரையில்

எமகண்டம் :  பிற்பகல்  12.00 மணி முதல் 01.30 வரையில்
சந்திராஷ்டமம் : அவிட்டம்,சதயம்.
பரிகாரம் : வெல்லம்.

mesham

மேஷம் ராசி
திட்டமிட்டு செயல்படுவதால் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். சொத்துக்கள் தொடர்பான வழக்கு விவகாரங்களில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைக்கும். 
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அசுவினி : போட்டிகள் குறையும்.
பரணி : வாய்ப்புகள் உண்டாகும்.
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

rishabam

ரிஷபம் ராசி
மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் தொடர்பான காரியங்களில் கவனம் வேண்டும். உத்தியோகம் தொடர்பான பயணங்களில் அலைச்சலும், அனுகூலமும் உண்டாகும். 
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : ஆசைகள் நிறைவேறும்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிடம் : அனுகூலமான நாள். 

midhunam

மிதுனம் ராசி
உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மிருகசீரிடம் :பொறுப்புகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : ஆர்வம் உண்டாகும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் அமையும்.

kadagam

கடகம் ராசி
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். பொருளாதார சிக்கல்கள் குறைந்து மேன்மை உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
பூசம் : இடமாற்றம் கிடைக்கும்.
ஆயில்யம் : மேன்மை உண்டாகும்.

simmam

சிம்மம் ராசி
தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் மேன்மை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : ஆலோசனைகள் கிடைக்கும். 
பூரம் : மாற்றமான நாள். 
உத்திரம் : புத்துணர்ச்சி பிறக்கும்.

kanni

கன்னி ராசி
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7 
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் 

உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.
அஸ்தம் : திருப்திகரமான நாள். 
சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

thulam

துலாம் ராசி
குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாகும். 

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : சுபிட்சமான நாள். 
சுவாதி : முயற்சிகள் கைகூடும்.
விசாகம் : இன்னல்கள் குறையும்.

viruchigam

விருச்சகம் ராசி
கூட்டாளிகளிடம் சற்று நிதானத்துடன் பழகவும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். வெளியூர் பயணங்களின்போது தேவையான கோப்புகளை எடுத்து செல்லவும். தள்ளிப் போன திருமண வாய்ப்பு கைக்கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

விசாகம் : நிதானம் வேண்டும். 
அனுஷம் : சிந்தித்து செயல்படவும்.
கேட்டை : உதவிகள் கிடைக்கும். 

dhanusu

தனுசு ராசி
ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மீக வழிபாடுகளில் மனம் ஈடுபடும். மனை மற்றும் வீடு வாங்குவது பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். பெரியோர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் மனமகிழ்ச்சியை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மூலம் : ஆர்வம் உண்டாகும்.
பூராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

makaram

மகரம் ராசி
குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். கொடுக்கல்-வாங்கலில் கவனத்துடன் இருக்கவும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்லவும். புதிய பொருட்களை வாங்குவதில் சற்று கவனமுடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
திருவோணம் : அனுசரித்து செல்லவும்.
அவிட்டம் : கவனம் வேண்டும்.

kumbam

கும்பம் ராசி
உறவுகளிடம் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி சுமூகமான சூழல் உருவாகும். புதிய வாகனங்கள் வாங்குவது பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். விவாதங்களில் எண்ணிய வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.
சதயம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.

meenam

மீனம் ராசி
சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை குறையும். நினைத்த காரியத்தை எண்ணியபடி செய்து முடிப்பீர்கள். சகோதரிகளின் உதவியும், ஒத்துழைப்பும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வதற்கான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : துரிதம் உண்டாகும். 
உத்திரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும். 
ரேவதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

ttnnewsdesk Sun, 07/07/2019 - 14:45
astrology today's rasipalan ராசி பலன்கள்  ஜோதிடம்

English Title

who will have chance to get married

News Order

0

Ticker

0 குடும்பத்தில் மகிழ்ச்சி யாருக்கெல்லாம் கிடைக்கும்?

இன்றைய ராசி பலன்கள் 06.07.2019 (சனிக்கிழமை)
நல்ல நேரம்    : காலை 7:45 மணி முதல் 8.45 வரை
            :மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம்    :காலை 9.00 மணி முதல் 10.30 வரை
எமகண்டம்        :பிற்பகல் 1.30 மணி முதல் 3.00 வரை 
சந்திராஷ்டமம் : அவிட்டம்
பரிகாரம்        : தயிர்
இன்று  சுக்ல சதுர்த்தி

மேஷம் ராசி

உத்தியோகத்தில் எதிர்பார்த்த சாதகமான சூழல் உண்டாகும். பிள்ளைகளின் மூலம் சுபச் செலவுகள் ஏற்படும். அறகாரியங்களை செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணவரவுகளின் மூலம் மேன்மையான சூழல் உண்டாகும். பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் நம்பிக்கையை அளிக்கும். 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அசுவினி : சாதகமான நாள். 
பரணி : மகிழ்ச்சியான நாள். 
கிருத்திகை : மேன்மையான நாள்.

ரிஷபம் ராசி
பணவரவு சுமாராக இருக்கும்.  வாகன பயணங்களில் கவனத்துடன் செல்வது நல்லது. ஆடம்பர பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். நினைத்த காரியங்களில் காலதாமதம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : விட்டுக்கொடுத்து செல்லவும்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிடம் : காலதாமதம் உண்டாகும். 

மிதுனம் ராசி
திருமணம் தொடர்பான சுப காரியங்கள் ஈடேறும். முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை : அங்கீகாரம் கிடைக்கும். 
புனர்பூசம் : துரிதம் உண்டாகும்.

கடகம் ராசி
குடும்பத்தினரின் தேவைகள் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை 

புனர்பூசம் : தேவைகள் பூர்த்தியாகும்.
பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 

சிம்மம் ராசி
மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். மனதில் தோன்றிய குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மகம் : அனுகூலமான நாள். 
பூரம் : ஆதாயம் உண்டாகும்.
உத்திரம் : தெளிவு பிறக்கும்.

கன்னி ராசி
உறவினர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நிலுவையில் இருந்து வந்த கடன்கள் வசூலாகும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். மற்றவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : உதவிகள் கிடைக்கும். 
அஸ்தம் : வேறுபாடுகள் தோன்றும். 
சித்திரை : அனுபவம் கிடைக்கும்.

துலாம் ராசி
குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். 

அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 7 
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
சித்திரை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
சுவாதி : வாய்ப்புகள் உண்டாகும்.
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.

விருச்சகம் ராசி
விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதாரம் மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.  சாதுர்யமாக பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள். தடைபட்ட சுப காரியங்கள் தற்போது நடைபெறும். வசதி வாய்ப்புகள் பெருகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : மகிழ்ச்சி உண்டாகும்.
அனுஷம் : ஆசைகள் நிறைவேறும்.
கேட்டை : வாய்ப்புகள் பெருகும். 

தனுசு ராசி
மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும். 
அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : ஆதாயம் உண்டாகும்.
பூராடம் : மாற்றமான நாள். 
உத்திராடம் : ஒற்றுமை மேலோங்கும்.

மகரம் ராசி
உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டாகும். வெளியூர் பயணங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் 

உத்திராடம் : கவனம் வேண்டும்.
திருவோணம் : அலைச்சல் உண்டாகும்.
அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

கும்பம் ராசி
பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். சுப காரிய முயற்சிகளில் அனுகூலமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். உறவினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : தீர்வு கிடைக்கும்.
சதயம் : மகிழ்ச்சியான நாள். 
பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் மறையும். 

மீனம் ராசி
சவாலான வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். திட்டமிட்ட காரியங்களில் சில இடையூறுகள் தோன்றி மறையும். உத்தியோகஸ்தரர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : சூட்சமங்களை கற்பீர்கள். 
உத்திரட்டாதி : இடமாற்றம் கிடைக்கும். 
ரேவதி : மாற்றமான நாள்.

manikkodimohan Sat, 07/06/2019 - 09:01
today's rasipalan astrology  ராசிபலன் ஜோதிடம்

English Title

today astrology in tamil

News Order

1

Ticker

0 


12 ராசி

12 ராசிகளுக்கு செல்வத்தைக் குவிக்கும் வெற்றிலை பரிகாரம்..!

என்ன செய்தாலும் பணமே என்னிடம் தங்குவதில்லை.. எவ்வளவு சம்பாதித்தாலும் கடனில் தான் வாழ்க்கை ஓடுகிறது... நான் நல்லவனாகவே இருந்தாலும் வீண் பழிகள் என்னமோ என்னிடமே தஞ்சமடைகின்றன என்று சத...  
 
2018 TopTamilNews. All rights reserved.