• March
    24
    Sunday

Main Area

Main



வயல் நண்டு சூப் செய்ய கத்துக்கிட்டா...வயாகரா வாங்க தேவையில்லை !?

வயல் நண்டு
வயல் நண்டு
Loading...

நண்டு கொழுத்தால் வலையில் தங்காதுன்னு கேள்விப்பட்டு இருக்கீங்களா… ஆக்ச்சுவலா அதுவே வெண்ணிற ஆடை மூர்த்தி பேசறமாதிரியான டபுள் மீனிங் பழமொழிதான்! நண்டும் நண்டல்ல வளையும் மண்னால் ஆன வளையல்ல,படிங்க புரியும்!

நண்டு பத்தி எத்தனையோ கதைகள் படிச்சு இருப்பீங்க,மனுசன் மாதிரியே நண்டுக்கறி  ருசி அறிஞ்ச இன்னொரு உயிர் நரி! மனிதனுக்கு இரண்டு கைகள் இருக்கின்றன.வயலில் உள்ள நண்டு வளையில் கையை விட்டு பிடிக்கலாம்.பாவம் நரி, அது என்ன செய்யும் என்று எப்போதாவது சிந்துச்சு பார்த்திருக்கிங்களா? 

வயல் நண்டு

நீங்க சிந்திக்காமல் இருக்கலாம். நரி சிந்திக்காமல் இருக்குமா! நரி,நண்டு வளைக்கிட்ட வந்து நின்னு தன்னோட வால அந்த வளைக்குள்ள விடுமாம். உள்ள ஓய்வெடுத்துக்கிட்டு இருக்கும் கொழுத்த நண்டு தனக்கு வசமான இரை கிடைச்சுருச்சுன்னு நம்பி ,அந்த வாலை கவ்விப்பிடிக்குமாம்.நரி எதிர் பார்த்ததும் இதைத்தான்.நண்டு வாலைக் கவ்வியவுடன் வாலை வெளியே இழுத்து நண்டை கருக்மொருக்குன்னு கடிச்சு தின்னுட்டு போய்கிட்டே இருக்கும்.

ஆனால்,நம்மளால அப்படியே பச்சையா சாப்பிட முடியாதில்லயா...அதனால நீங்க வயல் நண்டு சூப் செய்யக் கத்துக்கனும்.ரொம்ப சுலபமான ரெசிப்பிதான் தெரிஞ்சுக்குங்க.

நண்டோட பெரிய முன்னங்கால் தவிர மீதி உள்ள கால்கள்,முதுகில் இருக்கும் ஓடு எல்லாத்தையும்  தனியா பிச்சு வச்சுக்குங்க.ஒரு பாத்திரத்துல புளிய ஊறவச்சு கரைச்சு அதுல மிளகு தூள்,சீரகத்தூள்,மஞ்சள தூள் உப்பு எல்லாம் தேவையான அளவு சேர்த்திட்டு ,அதுக்குள்ள சுத்தம் பண்ணுன நண்டைப்  போட்டு வச்சுக்குங்க.

ரெண்டு மூனு தக்காளியையும் அதுல போட்டு நல்லா பிசஞ்சு கரைச்சு வச்சுட்டு ஒரு பாத்திரத்த எடுத்து அடுப்புல வச்சு நல்லெண்ணெய் விட்டு வெந்தயம் ,கருவேப்பிலை,நசுக்கிக்கிய இஞ்சி பூண்டு போட்டு வதக்குங்க,அப்புறம் பொடியா வெட்டுன சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்குங்க...இது பிராஸஸ் நடக்குறப்பவே நீங்க இன்னொரு வேலை செய்யணும்.

நண்டுல இருந்து பிச்சிப்போட்ட ஓடு,சின்னச்சின்ன காலெல்லாம்  இருகுல்ல அதெல்லாம் ஒரு மிக்ஸ்சியில போட்டு ஒரு ஓட்டு ஓட்டுங்க.வெங்காயம் வெந்ததும் மசால கலந்து வச்சு இருக்கற புளி கரைச்சலை எடுத்து ஊத்துங்க.அது கொதிக்கும்போது அரைச்சு வச்சிருக்கற மிக்சில இருக்கற ஓடு,கால் கலவைய அதுல ஊத்துங்க.

இன்னும் கொஞ்சம் மிளகுத்தூள் போட்டு ஒரு பத்து நிமிசம் கொதிக்கவிட்டு அடுப்பை அனைத்து வையுங்கள்.

2018 TopTamilNews. All rights reserved.