• July
    16
    Tuesday

Main Area

Main



தக்கிடி ஒரு டூ இன் ஒன் கறி!

தக்கிடி
தக்கிடி
Loading...

தக்கிடி என்பது ஒரு இஸ்லாமிய உணவு வகை.விசேஷ  தினங்களிலும்,திருமண விழாக்களிலும் தக்கிடிக்கு முக்கியமான இடமுண்டு. காயல் பட்டிணம்,நாகூர்,நாகப்பட்டினம், தூத்துக்குடி,மேலப்பாளையம்,

thakidi

திருநெல்வேலி என்று ஊருக்கு ஊர் சின்ன சின்ன வித்தியாசங்கள் இருந்தாலும்,எல்லாமே சுவையில் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை இல்லை. இது,இரண்டடுக்கைக் கொண்டது.இதைச் செய்தால் வேறு ஒன்றும் வேண்டாம்.இதுவே டூ இன் ஒன்! முதலில் சுலபமா மட்டன் தலைக்கறி செய்வது எப்படி என்று பார்ப்போம்

தேவையான பொருட்கள்
mutton
  • ஆட்டுத்தலைக்கறி.
  • (ஆட்டுத்தலையை நெருப்பில் வாட்டி,ரோமங்களை நீக்கி மஞ்ச பொடி போட்டு தேய்த்துக் கழுவி,வெட்டித் துண்டுகளாக்கி மீண்டும் கழுவிக்கொள்ளவும்.)
  • பெரிய வெங்காயம்  - 4
  • தக்காளி - 3
  • இஞ்சி,பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
  • பட்டை - 2 இஞ்ச்
  • கல்பாசி
  • லவங்க இலை
  • சோம்பு ½ ஸ்பூன்
  • மிளகாய் தூள் 
  • மல்லித்தூள்
  • மஞ்சள் தூள்
  • மிளகுத் தூள்
  • கறிவேப்பிலை
  • எண்ணை ஒரு குழிக்கரண்டி

செய்முறை
thakidi

குக்கர் பேனை அடுப்பில் வைத்து கடலை எண்ணஇ அல்லது நல்லெண்ணை ஒரு குழிக்கரண்டி ஊற்றி ,எண்ணை சூடானதும், அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு சோம்பு,பட்டை,கடல்பாசி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிவிட்டு,நறுக்கி வைத்த பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பின்க் நிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து வதக்கவும்,பச்சை வாசனை போன பிறகு தக்காளியைச் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி,எல்லாப் பொடிகளையும் சேர்த்து ஒரு புரட்டுப் புரட்டுங்கள்.

இப்போது, தலைக்கறித் துண்டுகளைச் சேர்த்து எல்லா துண்டுகள் மீதும் மசாலா படும்படி கிளறி,தேவையான அளவு உப்புச்சேர்த்து.விட்டு கறி முழுகும் அளவு நீர்விட்டு மூடியைப் போட்டு,சிம்மில் இருக்கும் நெருப்பை ஹைஃபிளேமில், எரியும்படி செய்யுங்கள். ஒரு விசில் வந்ததும் மீண்டும் சிம்மில் வைத்து 7 நிமிடம் விட்டு அடுப்பை அணைத்து வைக்கவும். வாருங்கள் தக்கிடி செய்வோம்.

தேவையான பொருட்கள்.

புட்டு மாவு 4 கப்
சின்ன வெங்காயம் 25
பச்சை மிளகாய் 5
தேங்காய் துருவல் 2 கப்
உப்பு

புட்டுமாவில், பொடியாக வெட்டிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய்,தேங்காய் துருவல் உப்புச்சேர்த்து கலந்துகொண்டு , அதில் சூடான தலைக்கறி குழம்பு ஒரு கரண்டு ஊற்றி சூடாக இருக்கும்போதே சிறிய வடைபோல தட்டிக்கொள்ளுங்கள்.இவற்றை அப்படியே தலைக்கறி குழம்பில் கொட்டி உடையாமல் கிளறி விட்டு கொஞ்சம் மிளகுத் தூள் சேர்த்து மீண்டும் அடுப்பை பற்ற வைத்து ஒரு கொதி விட்டு அடுப்பை அனைத்து ,தட்டில் அள்ளிப்போட்டு சாப்பிட வேண்டியதுதான்.

 

இதையும் வாசிக்க: இன்னுமா குழந்தைக்கு பேரு வைக்கல?! பிரசார கூட்டத்தில் காமெடி செய்த உதயநிதி

2018 TopTamilNews. All rights reserved.