• January
    21
    Monday

Main Area

Main

ஃபுட் கோர்ட் : மணமணக்கும் பருப்பு பாயசம் செய்வது எப்படி?

payasam
Loading...

பாயாசம் என்பது பாசிப்பருப்பினை கொண்டு செய்யப்படும் சுவையான உணவாகும். உணவில் மற்றும் வழிபாட்டிற்கான படையல்களில்  இனிப்புக்காக செய்யப்படும், உணவாக பாயாசம் பெரும்பாலும் செய்யப்படுகிறது. இது சுவையும் சத்துமிக்கது. இனி எளிதான முறையில் பருப்பு பாயாசம் செய்முறை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:  

 

paayasam

 

  • பாசிப் பருப்பு      - 100 கிராம் 
  • வெல்லம்               - 100 கிராம் 
  • தேங்காய்              -  1/2 மூடி 
  • முந்திரிபருப்பு      - 10 
  • திராட்சை               - 10 
  • ஏலக்காய்                - 3 
  • நெய்                          - 2 தேக்கரண்டி

செய்முறை:

 

payasam

**முதலில் பாசிப்பருப்பை கடாயில் போட்டு வாசம் வரும் வரை வறுக்கவும். 

**வெல்லத்தை தூளாக்கிக் கொள்ளவும். 

**தேங்காயை துருவிக்கொள்ளவும். 

**பாசிப்பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைக்கவும். 

**ஒரு விசில் வந்ததும் தீயை குறைத்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும். பின்            குக்கரை திறந்து பருப்பை நன்கு மத்தால் கடைந்து விடவும்.

**தூளாக்கி வைத்துள்ள வெல்லத்தை பருப்பினை போல் மூன்று மடங்கு தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

**அதில் மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பை போட்டு அத்துடன் சர்க்கரை கரைசலை சேர்த்து அடுப்பில் வைக்கவும். கலவை கொதிக்க ஆரம்பித்ததும் அதனுடன் துருவிய தேங்காயை சேர்க்கவும்.

**வாணலியில் நெய்யை ஊற்றி முந்திரி பருப்பு , உலர்ந்த திராட்சை இரண்டையும் சேர்த்து வறுக்கவும். அதை பாயாச கலவையில் கொட்டவும். அதில் ஏலக்காய் சேர்க்கவும். அனைத்தையும் ஒரு சேர கிளறி இறக்கவும் சுவையான பருப்பு பாயசம் தயார்.

**இதனை எல்லோரும் விரும்பி சாப்பிடுவர் பருப்பை வேகவைக்கும் போது சற்று மலர்ந்தால் போல் இருக்குமாறு பார்க்கவேண்டும்.

**பாயாசம் தயார் செய்ய சரியான பதமாகும் தேங்காய் பதிலாக தேங்காய் பாலை பயன்படுத்தலாம்.

2018 TopTamilNews. All rights reserved.