• October
    17
    Thursday

Main Area

Main



ஐயோ,மந்திரி பதவி வேண்டாம்! மத்திய அமைச்சர் அலறல்!

 அருண்ஜெட்லி
அருண்ஜெட்லி

இந்திய வரலாற்றில் முதன் முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி,தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்கிறது.அதில் ஒரு அமைச்சருக்கு மத்திய மந்திரி பதவி வேண்டாமாம்!

arun jaitley

புதிய அமைச்சரவையில் யாரெல்லாம் இருப்பார்கள்,புதிதாக யாரெல்லாம் வருவார்கள் என்பதுதான் இப்போது நாடெங்கும் ஹாட் டாக்!
டெல்லியில் ஊகங்களும்,வதந்திகளும் றெக்கை கட்டிப் பறக்கின்றன.

புதிய அமைச்சரவையில்,உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்,சுஸ்மிதா ஸ்வராஜ், அருன் ஜெட்லி,நிதின் கட்கரி நால்வருக்கும் கண்டிப்பாக இடம் உண்டு,என்று  நாடே நம்பிக்கொண்டிருக்கையில்...ஒருவர் அந்தர் பல்டி அடித்திருக்கிறார்!அது ,நிதியமைச்சர் அருன் ஜெட்லி.ஆமாம்,எனக்கு அமைச்சர் பதவியே வேண்டாம். அதிலும்,நிதியமைச்சர் பதவி வேண்டவே வேண்டாம் என்கிறாராம்.

arunjaitley

அதனால்,அடுத்த நிதியமைச்சர் யார்,என்கிற கேள்வி பரபரப்பாக்கி இருக்கிறது.பியூஸ் கோயலாக இருக்கலாம் என்று சிலரும்,ஐந்து வருடமாக வெளிப்படையாக கேட்டுக்கொண்டே இருக்கும் சுப்பிரமணிய சுவாமி என்று ஒரு கோஷ்டியும் பேசினாலும்,அடுத்த நிதியமைச்சர் அமித்ஷாதான் என்கிறார்கள் பிஜேபி-யின் உள்வட்டம் அறிந்தவர்கள்.அதோடு வெளிவிவகார துறை,பாதுகாப்புத்துறையிலும் கூட மாற்றம் இருக்குமாம்!

2018 TopTamilNews. All rights reserved.