• June
    27
    Thursday

Main Area

Main



அமமுகவிலிருந்து அதிமுகவில் இடம்பெயர்ந்த முன்னாள் அமைச்சர்!

இன்ப தமிழன்
இன்ப தமிழன்
Loading...

முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் அ.ம.மு.க.வில் இருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

அ.தி.மு.க.வில் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்த தாமரைக்கனியின் மகன் இன்பத்தமிழன் 2001-ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.

இந்நிலையில் 2006-ஆம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்த இவர் 2009-ஆம் ஆண்டில் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். இந்நிலையில் அ.ம.மு.க.வில் இருந்த இன்பத் தமிழன் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அப்போது அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 

2018 TopTamilNews. All rights reserved.