• May
    23
    Thursday

Main Area

Main



சூப்பர் சிங்கர் பூவையாரை புகழ்ந்து தள்ளிய விஜய் 

சூப்பர் சிங்கர் போட்டியாளர் பூவையார்
சூப்பர் சிங்கர் போட்டியாளர் பூவையார்
Loading...

சென்னை: சூப்பர் சிங்கர் பூவையாரை பார்த்து தளபதி விஜய் சொன்ன விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய்  நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் கதிர்,யோகி பாபு,விவேக்,ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.அதையடுத்து இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் பல்வேறு இடத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

poovaiyar

இந்நிலையில் தளபதி 63 திரைப்படத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியாளர் பூவையார் இணைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின. அதையடுத்து தற்போது விஜய் சூட்டிங் ஸ்பாட்டில் கூறியதை பற்றி பூவையார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது ' நல்லா பாடுறீங்க அதை விட நல்லா கலாய்க்கறீங்க என கூறியுள்ளார். மேலும் இப்படியே போனால் ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும்' என பூவையரை புகழ்ந்து பேசியுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.