• February
    22
    Friday

Main Area

Main

யோகிபாபு படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம்!

DharmaPrabhu
DharmaPrabhu
Loading...

சென்னை: நடிகர் யோகிபாபு நடிக்கும் தர்மப்பிரபு திரைப்படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஜனனி ஐயரு நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விஸ்வாசம் மற்றும் வந்தா ராஜாவதன் வருவேன் திரைப்படத்தில் தனது எதார்த்தமான காமெடி மூலம் அரங்கத்தையே சிரிப்பில் அழித்தினர். அதைத்தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

விமல் நடித்துள்ள 'கன்னிராசி' படத்தின இயக்குநர் முத்துகுமரன் இயக்கத்தில் யோகிபாபு தற்போது தர்மபிரபு படத்தில் நடித்துவருகிறார். `வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக் முக்கிய கதாபாத்திரங்களில் இதில் நடித்துவருவதாக கூறப்பட்டுள்ளது. 

dharmaprabu

இந்நிலையில் முழு நீள நகைச்சுவை படமாக உருவாகும் இதில் பிக் பாஸ் பிரபலமும் நடிகையான ஜனனி ஐயரு இதில் சிறப்பு வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில்,யோகிபாபு எமனாகவும், ராதாரவி அவருடைய தந்தையாகவும் நடிக்கின்றனர். எமலோகத்திற்கான படப்பிடிப்பு தளத்தை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக அமைத்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தின் படப்பிப்பு சிறப்பாகவும், வேகமாகவும் நடைபெற்று வருகிறது.

2018 TopTamilNews. All rights reserved.