• March
    24
    Sunday

Main Area

Main



18 சட்டமன்ற தொகுதிகள் இடைத்தேர்தல்; டிடிவி தினகரனுக்கு எதிராக அதிமுக சதி?!

டிடிவி தினகரன் - ஓபிஎஸ் இபிஎஸ்
டிடிவி தினகரன் - ஓபிஎஸ் இபிஎஸ்
Loading...

இடைத்தேர்தல் முடிந்தால் டிடிவி தினகரன் தரப்புக்கு மவுசு அதிகமாகிவிடும் என்பதால் சதி நடக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் அன்றே தமிழகத்தில் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகள் வழக்குகள் காரணமாக இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளன. 88 தொகுதிகள் உள்ள திமுக இடைத்தேர்தல் நடைபெறும் 21 தொகுதிகளில் ஜெயித்தால், காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் உதவியுடன் ஆட்சியை கலைத்துவிடும். திமுக தமிழக மக்களிடம் பெரும்பான்மை செல்வாக்குள்ள கட்சி என்பதால் அவர்களிடம் இருந்து ஆட்சியை காப்பாற்ற அதிமுக தரப்பு இவ்வாறு செய்துள்ளது.

டிடிவி

தேர்தல் முடிவு முழுக்க முழுக்க திமுக பக்கம் சாதகமாக அமைந்தால், அதிமுக திமுக என இரு தரப்பிடமும் முறையே 115 இருக்கும். ஆட்சியை காப்பாற்ற டிடிவி தினகரன் துணை தேவைப்படும். அதிமுக தரப்பை தொடர்ந்து சாடிவரும் டிடிவி தினகரனிடம் அதிமுக உதவி வேண்டி நிற்க விரும்பவில்லை. எனவே சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இன்னும் குளறுபடி ஏற்பட வாய்ப்புள்ளதாம்! சில தொகுதிகளில் நேரடியாகவே பணத்தை வாரியிறைத்து அங்கும் தேர்தலை நிறுத்த அதிமுக தரப்பு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது!

2018 TopTamilNews. All rights reserved.