• March
    24
    Sunday

Main Area

Main



மசூத் அசார், தாவூத் இப்ராஹிம், செய்யது சலாவுதின்; பாகிஸ்தானுக்கு இந்தியாவின் கோரிக்கைகள்?

மசூத் அசார் - தாவூத் இப்ராஹிம் - சலாவுதீன்
மசூத் அசார் - தாவூத் இப்ராஹிம் - சலாவுதீன்
Loading...

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை போட்ட பின்னர், பாகிஸ்தானுக்கு இந்தியா ஒரு கோரிக்கையை வைத்துள்ளது.

மசூத் அசார்

மசூத் அசார்

புல்வாமா தாக்குதலுக்கு காரணம் என்று கூறப்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என ஐநாவில் கோரிக்கை வைத்தது இந்திய அரசாங்கம். இதில் அமெரிக்காவும் இந்தியாவுக்கு ஆதரவாய் இந்த கருத்தை ஏற்றுக்கொண்டது. சீன தேசம்  இதுகுறித்து யோசித்து முடிவெடுப்பதாக முட்டுக்கட்டை போட்டுவிட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் ஒரு கோரிக்கை வைத்துள்ளது.

தீவிரவாத இயக்கங்களுக்கு உதவுவதாய் பாகிஸ்தான் மீது குற்றம்சுமத்தும் இந்திய அரசாங்கம், பாகிஸ்தானில் உள்ள இந்தியாவை சேர்ந்த பயங்கரவாதிகள் மற்றும் சர்வதேச பயங்கரவாதிகளின் பட்டியலில் உள்ளவர்களை ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

தாவூத் இப்ராஹிம்                                       

தாவூத்

இந்தியாவை சேர்ந்த தாவூத் இப்ராஹிம் மற்றும் ஹுஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி செய்யது சலாவுதீன் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்யது சலாவுதீன்

சலாவுதீன்

இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பு இன்னும் பதில் அளிக்கவில்லை, வெகுவிரைவில் பதில் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

2018 TopTamilNews. All rights reserved.