• February
    19
    Tuesday

Main Area

Main

கும்பமேளா: புனித நீராட செல்கிறார் அமித்ஷா

gumbh
gumbh
Loading...

லக்னோ: கும்பமேளா விழாவில் புனித நீராட செல்கிறார் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் நடக்கிற கும்பமேளா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடுவது வழக்கம்.

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 4-ஆம் தேதி வரை தொடர்ந்து 50 நாட்கள் இந்த விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் கும்பமேளா விழாவில் கலந்துகொண்டு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நாளை புனித நீராட உள்ளார் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். அமித்ஷா கும்பமேளா நிகழ்வில் தவறாமல் கலந்துகொள்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.