• June
    25
    Tuesday

Main Area

Main



டி.டி.வி.தினகரனுக்கு ஆப்பு வைக்கும் சசிகலா... அமமுக பொதுச்செயலாளராகிறார் கிருஷ்ணப்ரியா..?

கிருஷ்ணப்ரியா
கிருஷ்ணப்ரியா
Loading...

மக்களவை தேர்தல், இடைத்தேர்தலில் படு தோல்வி அடைந்த பிறகு பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க இருக்கிறார் டி.டி.வி.தினகரன். சசிகலா

கர்நாடகாவை சேர்ந்த புகழேந்தி வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே தன்னை தோற்கடிக்க சதிகள் நடப்பதாக கதறினார்.  ஆனால், இப்படி ஒரு மோசமான தோல்வியை அவர் எதிர்பார்த்து இருக்கவே மாட்டார். காரணம் சில ரவுண்டில் 26  ஓட்டு இன்னொரு ரவுண்டில் 28 ஓட்டு இன்னொரு ரவுண்டில் 54 ஓட்டு என்று ஏறக்குறைய பல ரவுண்டுகளில் மூன்று இலக்கத்தையே புகழேந்தி  வாங்கவே இல்லை. காரணம் டி.டி.வி.தரப்பு  அங்கே வேலையே செய்யவில்லையாம். கிருஷ்ணப்ரியா

டி.டி.வி.தினகரனுக்கு புகழேந்தி மீது ஒரு சந்தேகம். தன்னை பற்றி தப்பு தப்பாக சசிகலாவிடம் போட்டு தருகிறாரா என்ற சந்தேகம்தான் அது. அதற்கு ஏற்றார் போல தேர்தல் முடிவு வந்ததும் அதை அப்படியே தன் சோர்ஸ் மூலம் சசிகலாவுக்கு பாஸ் செய்திருக்கிறார்புகழேந்தி.  இதனால் டென்ஷனான சசிகலா ‘என்னை நல்ல முறையில் சிறையில் கவனித்து கொள்வதற்கு காரணமே புகழேந்திதான். அவரை இப்படி கேவலமாக நடத்தியது சரியில்லை’’ என்று கொந்தளித்து இருக்கிறார்.  அதனால் அமமுக தலைமையில் மாற்றம் வரலாம் என்றே  கூறப்படுகிறது.  அமமுகவில் தினகரனை தூக்கியடித்து விட்டு அவருக்கு மாற்றாக வேறு யாரை கொண்டு வரலாம் என்பதே இப்போது சசிகலாவின் முன் உள்ள கேள்வி.தினகரன்

டி.டி.வி மீதுள்ள சசிகலாவின் கோபத்தை அறிந்த இளவரசி குடும்பத்தார் அமமுகவை வழி நடத்த விவேக் ஜெயராமன் அல்லது கிருஷ்ணப்ரியா ஆகிய இருவரில் ஒருவரை நியமிக்க சசிகலாவிடம் வலியுறுத்த முடிவெடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.