• July
    22
    Monday

Main Area

Main



உங்கள் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கணுமா: இந்த வாழைப்பழம் ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க...

வாழைப்பழம் ஃபேஸ் பேக்
வாழைப்பழம் ஃபேஸ் பேக்
Loading...

கோடை காலங்களில் சருமத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது ரொம்ப முக்கியம். நாள் முழுக்க வெய்யிலில் சுற்ற வேண்டிய அவசியம் இருந்தால் வெளியில் போகும்போது சுத்தமான மெல்லிய துணியால் முகம் முழுவதும் மறைக்கிற மாதிரி கட்டிக்கொண்டு போங்கள்.

வாழைப்பழம் ஃபேஸ் பேக்


 காலை,மாலை இரண்டு நேரமும் ஐஸ் கட்டியை துணியில் முகம் முழுக்க ஒத்தடம் கொடுக்கலாம். அதையும் மீறி,சிலது முகம் பொலிவிழந்து வறண்டு காணப்படும்.அப்படிப் பட்டவர்கள்,கடைகளில் விற்கும் க்ரீம்களை பயன் படுத்துவதைவிட  நாமே ஆரோக்கியமான க்ரீம்களை தயாரித்து பயன்படுத்தலாம்.பட்ஜெட்டும் அதிகமிருக்காது.உங்கள் முகம் பொலிவுடன் இருக்க இந்த வாழைப்பழம் ஃபேஸ் பேக்கை  ட்ரை பண்ணிப் பாருங்க..
 
 தேவையான பொருட்கள் 

 
•    வாழைப்பழம் - 2 சிறு துண்டு 
 
•    தேன் - 1 tbsp
 
•    தயிர் - 1 tbsp
 
•    எலுமிச்சை - 4 சொட்டு 

banana mask


 
மேலே குறிப்பிட்டுள்ள அணைத்து பொருட்களையும் ஒன்றாக பேஸ்ட்  பதத்திற்கு மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் அப்படியே வைத்திருக்க வேண்டும்.பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி முடித்து பாருங்கள் உங்கள் முகம் பள பளவென்று மின்னும்!

banana mask


 
இந்த பேக் வெயில் காலத்திலிருந்து நமது சருமத்தை பாதுகாக்க உதவும் மேலும் முகமும் பொலிவுடன் இருக்கும்.

2018 TopTamilNews. All rights reserved.