• July
    18
    Thursday

Main Area

Main



இந்த வாட்டி செக்ஸ் பாஸ்’நிகழ்ச்சியா மாறப்போகுதா பிக்பாஸ் நிகழ்ச்சி...கடுப்பேத்துறாங்க மைலார்ட்...

பிக் பாஸ் சீஸன் 3
பிக் பாஸ் சீஸன் 3
Loading...

வரும் ஜூன் 23ம் தேதி துவங்கவிருக்கும் பிக் பாஸ் சீஸன் 3 நிகழ்ச்சியில் இதுவரை நடிகை ஜாங்கிரி மதுமிதா தவிர வேறு எவர் பெயரும் விஜய்டிவியால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் செக்ஸ் பாம் என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகை ஸ்ரீரெட்டி கலந்துகொள்ளக்கூடும் என்று திரையுலகத்தினர் எவராலும் ஜீரணிக்கமுடியாத செய்தி ஒன்று மெல்ல எட்டிப்பார்க்கிறது.

madhumitha

பிக்பாஸ் இரண்டாவது சீஸன் சற்றே போரடித்ததால் சீஸன்3யில் கலந்துகொள்ள பெரும்பாலானோர் ஆர்வம் காட்டாமல் தட்டிக்கழித்தனர் என்று சொல்லப்பட்டது.இதனால் கவலையடைந்த விஜய் டி.வி.நிர்வாகம் இம்முறை இந்நிகழ்ச்சியை ஹிட்டடிக்க தரை மட்ட லெவலில் இறங்கி ஏதாவது செய்தாக வேண்டும் என்ற ந்முடிவின் விளைவே ஸ்ரீரெட்டியின் எண்ட்ரி என்கிறார்கள்.

sri reddy

ஆனால் ஸ்ரீரெட்டியின் எண்ட்ரியை கமல் சுத்தமாக விரும்பவில்லை என்றும் ஒன்றிரண்டு நாள் தங்கும் சிறப்பு விருந்தினராக மட்டும் அவரைக் கலந்துகொள்ள வைத்துவிட்டு பின்னர் கழட்டிவிடலாம் என்றும் அபிப்ராயம் சொல்லியிருப்பதாகச் சொல்கிறார்கள். சமூக அக்கறையுள்ள இந்த சங்கதியில் வெல்வது கமலா அல்லது விஜய் டி.வியா என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.

2018 TopTamilNews. All rights reserved.