• July
    16
    Tuesday

Main Area

manikkodimohan's blog
பாலியல் தொல்லை

இரண்டு ஆண்டுகளாக 59 சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர்: மிட்டாய் வாங்க சென்ற இடத்தில் நடந்த கொடூரம்!

கேரளாவின் பாலக்காடு அருகே பட்டாம்பி திருத்தலா பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். 57 வயதாகும் இவர் அங்குள்ள அரசு பள்ளியின் அருகே பெட்டிக்கடை ஒன்று நடத்தி வந்துள்ளார்.

தற்கொலை

15 வது மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை: 'எஸ்ஆர்எம் கல்லூரி'யில் தொடரும் மர்மங்கள்!

எஸ்.ஆர்.எம் கல்லூரியின்  மாடியிலிருந்து குதித்து  மாணவர் ஒருவர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆனந்த்

ஓரின சேர்க்கைக்கு மறுத்த இளைஞர்: கூட்டு சேர்ந்து கொலை செய்த வாட்ஸ் ஆப் நண்பர்கள்; அதிர வைக்கும் சம்பவம்!

தன்பால் உறவுக்கு மறுத்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெட்ரோல் பங்க்

பெட்ரோல் பங்கிற்குள் கஞ்சா போதையில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல்: அதிர்ச்சி தரும் சம்பவம்!

கஞ்சா போதையில் வந்த ரவுடிக் கும்பல் ஒன்று பெட்ரோல் பங்கிற்கு ஆயுதங்களுடன் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 சாக்ஷி மிஸ்ரா - அஜிதேஷ் குமார்

காதல் திருமணம் செய்துகொண்ட பாஜக எம்எல்ஏ மகளின் கணவர் கடத்தல்: நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு!

பாஜக எம்.எல்.ஏ மகளின் கணவர் நீதிமன்ற வாசலில் இன்று கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காமராஜர் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?

இன்று தமிழ், தமிழ் என்று வாய் கிழிய பேசுகிற அரசியல்வாதிகளுக்கு மத்தியில்,  உண்மையிலேயே மக்களுக்காக வாழ்ந்த தலைவர் காமராஜர். அவர் அப்படி வாழ்ந்ததினால் தான் ஐம்பது வருடங்கள் கழித்தும், மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக எல்லா கட்சியினரும், ‘காமராஜர் ஆட்சியைக் கொடுப்போம்’ என்று சொல்லி ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு கேட்டு வருகிறார்கள்.

kamarajar


என்ன திட்டம் கொண்டு வருவதானாலும், அதனால் என் மக்களுக்கு என்ன பயன் என்று கேட்டு, அதற்கேற்ப திட்டங்களைச் செயல்படுத்திய தலைவர் காமராஜர். தன் ஒரே மகனுக்கு கல்யாணம் செய்து பார்க்க வேண்டும் என்று காமராஜரின் தாயார் ஆசைப்பட்டார். அப்போதைய பல தலைவர்களும் கூட பலமுறை காமராஜரை திருமணம் செய்துக் கொள்ளும் படி வற்புறுத்தி வந்தார்கள். யாரிடமும் காரணம் சொல்லாமலே தன் திருமண விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து வந்தார் பெருந்தலைவர்.

kamarajar


அன்று பலரது மனத்திலும், வயசாகி கொண்டே போகிறதே... ஏன் காமராசர் இன்னும் திருமணம் செய்யவில்லை? என்கிற கேள்வி ஓடிக்கொண்டே இருந்தது. பொதுக்கூட்டங்களிலும் கூட, காமராஜர் பேசும் போது, அவர் மீதுள்ள அதீத அன்பால், மக்கள் அவரிடமே, ‘ஒரு கல்யாணம் பண்ணிக்கலாமில்லையா ஐயா?’ என்று கேட்டிருக்கிறார். ‘இப்ப அதுக்கு என்ன அவசரம்ணேன்’ என்று அப்போதைக்கு அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்து வந்தார். பின் இந்தக் கேள்வியை அவரிடத்தில் கேட்க யாருக்கும் துணிவு வரவில்லை. ஒரு கட்டத்தில், எல்லோருமே அமைதியாகி விட்டனர். 
ஒரு முறை, இங்கிலாந்து ராணி காமராஜரிடம் நேரடியாக, ‘ஏன் நீங்கள் இதுவரையில் திருமணமே செய்துக் கொள்ளவில்லை’ என்று கேட்டார். அந்த கேள்வி இங்கிலாந்து ராணியிடம் இருந்து வந்த அடுத்த வினாடியே, கொஞ்சமும் யோசிக்காமல் காமராஜர் சொன்ன பதில் இங்கிலாந்து ராணியை மெய்சிலிர்க்க வைத்தது.

kamarajar


காமராஜர் சொன்ன பதில் இது தான்... 
‘நான் முதல்வர் ஆகி விட்டேன். ஆனால், இன்றும் என் ஆட்சியில் பல பெண்கள் திருமண வயதைத் தாண்டியும் அவர்களுடைய வறுமையின் காரணமாக திருமணமாகாமல் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் திருமணம் செய்துக் கொள்ளாமல் வறுமையில் இருக்கும் போது, நான் மட்டும் எப்படி திருமணம் செய்துக் கொள்ள முடியும். எங்கள் சமூகத்தில்  எப்போதுமே வீட்டில் தங்கைக்கு தான் முதலில் திருமணம் முடிக்கும் வழக்கம் உள்ளது. என் தங்கைகளுக்கெல்லாம் திருமணம் செய்யாமல் இருக்கும் போது, நான் எப்படி அதை மீறி திருமணம் செய்து கொள்வது?’ என்றார்.  நாட்டையே தன் வீடாக நினைக்கும் எண்ணம் இனி எந்த அரசியல்வாதிக்கு வருமோ?

manikkodimohan Mon, 07/15/2019 - 10:24
Kamarajar birthday Kamarajar marriage Kamarajar history காமராஜர் தமிழகம்

English Title

today kamarajar birthday: Kamarajar The Legend In Indian History

News Order

0

Ticker

0
2018 TopTamilNews. All rights reserved.