• January
    21
    Monday

Main Area

Main

மகனுடன் தகாத உறவு: நடு ரோட்டில் இளம்பெண்ணை கொலை செய்த தந்தை!

investigation
Loading...

நெல்லை: அம்பாசமுத்திரத்தில் மகனுடன் தகாத உறவு வைத்திருந்த பெண்ணை நடு ரோட்டில் வைத்து தந்தையே கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் என்பவரது மகன் நாலாயிரம் முத்து(வயது 30). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 35 வயதான விஜி என்ற சுந்தரிக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது.

நாலாயிரம் முத்துவுக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில், சுந்தரிக்கும் இவருக்கும் இடையே இருந்த உறவினால் 2 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளனர். இதனால், அவரின் குடும்பத்தினருக்கும், சுந்தரி குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில், இன்று காலை கடைக்குச் சென்று விட்டு திரும்பிய  சுந்தரியுடன், நாலாயிரம் முத்துவின் தந்தை தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சண்முகவேல் வெட்டியதில், சம்பவ இடத்திலேயே சுந்தரி உயிரிழந்துள்ளார்.

அதைத் தடுக்க வந்த சுந்தரியின் தங்கை ராமலட்சுமிக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அவர் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக இருக்கும் சண்முகவேலை வலைவீசித் தேடி வருகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.