• January
    21
    Monday

Main Area

Main

நீட் தேர்வில் சிபிஎஸ்இ சர்வாதிகார போக்கு: உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்

madurai high court
Loading...

மதுரை: நீட் தேர்வு விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு வினாக்களில் தமிழில் மொழி பெயர்ப்பு செய்ததில் குளறுபடி நடந்துள்ளது. அதனால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கடந்த 2-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசு சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள், ஆங்கில மொழியில் இருந்து தமிழுக்கு எதன் அடிப்படையில் நீட் தேர்வு கேள்விகள் மொழி பெயர்க்கப்படுகின்றன? நீட் தேர்வில் இடம்பெறும் கேள்விகளுக்கான வார்த்தைகள் எந்த அகராதியில் இருந்து எடுக்கப்படுகின்றன? தமிழில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன/எடுக்கப்படுகின்றது? போன்ற கேள்விகளை எழுப்பினர். அத்துடன், வழக்கு விசாரணையை ஜூலை 6-ம் தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வு விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பீகார் மாநிலத்தில் மட்டும் அதிகமான மாணவர்கள் வெற்றிபெற்றது எப்படி? வழக்கு விசாரணைக்கு வருவது தெரிந்தும் அறிவித்த நாளுக்கு முன்பே தேர்வு முடிவை வெளியிட்டது ஏன்? பிழையான வினாக்களுக்கு மதிப்பெண் கொடுக்காமல் எவ்வாறு தேர்வு முடிவை வெளியிட முடியும்? என்றும் கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இரு தரப்பினரின் வாதமும் முடிந்த பின்னர் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

2018 TopTamilNews. All rights reserved.