• April
    23
    Tuesday

Main Area

Main



அடித்து மாய்ந்துகொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்: அப்பலோவில் சிகிச்சை பெறும் அவல நிலை!

anand singh
anand singh
Loading...

பெங்களூரு: ரிசார்ட்டில் ஏற்பட்ட மோதலில், தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங்கின் புகைப்படம் வெளியாகியுள்ளது. 

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை, பாஜக கலைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகியது. இதனையடுத்து, ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராம்நகர் அருகேயுள்ள தனியார் சொகுசு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். 

நேற்று முன்தினம் இரவு, ரெசார்ட்டில் உள்ள ஒரு அறையில் பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த் சிங், பீமா நாயக், கணேஷ் ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடையே ஏற்பட்ட மோதலில், பீமா நாயக்கும், கணேஷும் சேர்ந்து ஆனந்த் சிங்கை கடுமையாக தாக்கியுள்ளனர். 

apollo

இந்த தாக்குதலில் ஆனந்த் சிங் கடுமையாக பாதிக்கப்பட்டதாக அப்போதே செய்திகள் வெளியாகின. ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடையே எந்த மோதலும் இல்லை என அக்கட்சியின் தலைமை மறுப்பு தெரிவித்தது. 

இந்த நிலையில், ஆனந்த் பலத்த காயங்களுடன் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் சில ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

2018 TopTamilNews. All rights reserved.