• July
    22
    Monday

Main Area

Main



ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம்: தி.மு.க. செயற்குழு உறுப்பினர் கைது; அ.தி.மு.க.வின் சதிசெயலா?

சந்திரன்  
சந்திரன்  
Loading...

கோவை: ரயிலில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட புகாரின் பேரில்   திமுக செயற்குழு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம்
abuse

கோவையை அடுத்த இருகூர் பகுதியைச் சேர்ந்த சந்திரன் , திமுக செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் சென்னையில் நடைபெற்ற திமுக தேர்தல் நேர்காணலுக்குக் கடந்த  8-ஆம் தேதி  சென்றுவிட்டு கோவைக்கு ரயிலில் திரும்பியுள்ளார். அப்போது ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிட அங்கிருந்தவர்கள் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி உள்ளனர். 


தவறுதலாக நடந்து விட்டது
train

இது தொடர்பாக அங்கு வந்த ரயில்வே போலீசாரிடம் தவறுதலாக நடந்து விட்டது என்று கூறி சந்திரன், சன் ராஜேந்திரன் மற்றும் அவர்களுடன் வந்த மற்ற மூன்று நபர்களும் எழுதிக்கொடுத்து சமாதானம் செய்துவிட்டு கோவைக்குச் சென்றுள்ளனர். 

 திமுக செயற்குழு உறுப்பினர் கைது 
arrest

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக  சென்னையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள சேலம் ரயில்வே போலீசார் சூலூரில்  வைத்து  திமுக செயற்குழு உறுப்பினர் சந்திரனை கைது செய்தனர். ஆனால்  தவறுதலாக நடந்து விட்டதாக எழுதி கொடுத்துவிட்டு வந்த பின், முதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறி போலீசார் கைது செய்துள்ளது சதிச்செயல் என்று திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். 


அதிர்ச்சியில் திமுகவினர் 
stalin

முன்னதாக பொள்ளாச்சி வழக்கில் திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திமுக நிர்வாகி மகனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதைத் தொடர்ந்து திமுக நிர்வாகி ஒருவர் பாலியல் வழக்கில் கைதாகியுள்ளது அண்ணா அறிவாலய வட்டாரத்தில் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. 
 

2018 TopTamilNews. All rights reserved.